திங்கள், பிப்ரவரி 15, 2010

கண்ணீரும் கதை சொல்லும்

இரத்தத்தை விலைக்கு கேட்டான் சொத்து படைத்தவன் !
செத்துக்கொண்டிருக்கும் தாய்க்கு இரத்த தானம் கேட்டான் சேர்ந்துப்பழகியவன்
………………………………………………………………..
கண்ணீரும் கதை சொல்லும்
புலிகேசி
என்ன சுந்தரம் , முடிஞ்சா சொல்லு . இல்லாட்டா நட .
புரட்சி பதிப்பகம் பரசுராமன் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் சுந்தரத்தேவன். அவன் கண்களில் நீர் திரண்டது.
ஆத்திரமும் துக்கமும் கலந்து தொண்டையை அடைத்தது.அவனது கைகள் அவனையும் அறியாமல் மேசையிலிருந்த
காகிதக்கட்டை எடுத்தன.பரசுராமன் முகத்தை பார்க்கக்கூடவிரும்பாதவனாய் கண்களில் வழிந்த நீரை துடைத்தவாறே அந்த புரட்சி
பதிப்பகத்தை விட்டு அகன்றான்.
சுந்தரத்தேவன் மனம் குமுறியது.இரவும் பகலும் கண்விழித்து எழுதி முடித்த நானூறு பக்க கண்ணீரும் கதை சொல்லும் நாவலை முப்பது
ரூபாய்க்கு (1960 )அதுவும் யாரோ ஒரு சிறுகதைமன்னன் பெயரில் வெளியிட எந்த எழுத்தாளன் சம்மதிப்பான்.இந்த இழிச்செயலுக்கு விலை
பேச நா கூசவில்லையா .எத்தனை துணிவு.
கதிரவன் தன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.செங்கதிரோனின் இலட்சியப்பயணம் பகல் பன்னிரண்டு என்பதை . அறிவுருத்தியது.
சுந்தரத்தேவன் தன் குடிசைக்குள் நுழைந்தான்.அந்த குடிசையிலிருந்த கய்ற்று கட்டிலைத் தவிற அவனை எதிர்கொள்ள யாரும் இருப்பதாக
தெரியவில்லை. கீழே கிடந்த கிழிந்த பாயில் புத்தகங்களும் வெள்ளைக்காகிதங்களும் நிரம்பிக்கிடந்தன.நெடுந்தொலைவு நடந்த களைப்பு
அவனை உறக்கத்தில் ஆழ்த்தியது.
* * * * * * * * * * * * * *
சுந்தரா…
குரல் கேட்டு கண்விழித்தான் சுந்தரத்தேவன்.
வாசலில் நின்றுகொண்டிருந்தான் நண்பன் நாதமுனி.
வாடா என்ன திடீர் விஜயம் ! கண்களைக்கசக்கியவாரே நண்பனை வரவேற்றான் சுந்தரத்தேவன்.
சுந்தரா , அம்மாவுக்கு ரெண்டு மாசமா ஒடம்பு சரியாயில்ல.இன்னிக்கு டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து வாங்க பணமில்ல.அவசியம் வாங்கிக் . கொடுக்க சொன்னார். காலேலருந்து அலையுறேன்.
கண்கலங்கினான் நாதமுனி.
சுந்தரத்தேவன் மனம் வெதும்பினான். பெற்றதாய் பெரும்பயணப்படுக்கையில்.உற்றமகன் கையறு நிலையில்.இதயத்தை துண்டாக பிளப்பது
போலிருந்தது.
நாதமுனி .கவலப்படாதே .ஒரு அஞ்சரை மணிக்கு வா .நான் ஏற்பாடு பண்றேன்.
நண்பனுக்கு விடைகொடுத்தான் சுந்தரத்தேவன்.
நாதமுனி சென்ற சில நொடிகளில் புரட்சிப்பதிப்பகத்தை நோக்கி நடந்தான் தேவன்..
படைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கும் புரட்ச்சிப்பதிப்பகம் கம்பீரமாக காட்ச்சியளித்தது.
வாப்பா சுந்தரம்.நீ வருவேண்ணு நல்லா தெரியும்.
உள்ளே நுழைந்த தேவனை பரசுராமன் குரல் ஏளனம் செய்தது.
சுந்தரத்தேவன் மறுமொழி எதுவுமின்றி மூன்று மாதம் கண்விழித்து எழுதிய நாவலை முப்பது ரூபாய்க்கு நீட்டினான்.பரசுராமன் கொடுத்த
பத்திரத்தில் கையெழுத்திட்டு முப்பதுரூபாயை பெற்றுகொண்டான்.புரட்சி பதிப்பகத்தின் பெயர்ப்பலகை தேவனை பார்த்து நகைத்தது.
அவன் கண்களில் நீர் கசிந்தது.அந்த கண்ணீர் –
வெறுப்புக் கண்ணீரா அல்லது நட்புக்கு உதவும் ஆனந்த கண்ணீரா,
இப்போது கம்பீரமாக காட்ச்சி தந்தது புரட்சிபதிப்பக பெயர்பலகை அல்ல, சுந்தரத்தேவனே.
அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படை என்று பகர்ந்தான் பாவணன். — அவன் பாட்டின் பொருளைத் திருடி
வேறு புலவனின் சொற்களில் கவிதை படைக்கிறான். அவன் வயிறு நிறம்புகிறது.
————————————————————————————-
1962 – ல் கலைவேந்தன் மாதமிறுமுறை பல்சுவை இதழில் புலிகேசி என்ற பெயரில் முதல் முதலில் அச்சேறிய சிறுகதை.–பாண்டியன்ஜி

இடுகை 0009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !