சனி, அக்டோபர் 12, 2013

தி இந்துவும் டியெம்கேயும்


தூள் பக்கோடா
( மாலை நேரங்களில் சுடசுட கிடைக்கும் இந்த எண்ணைப் பலகாரம் மூக்கையும் நாக்கையும் ஈர்க்கத்தக்கது. நான் அறிந்த பல்வேறு சுவையான தகவல்களை இந்த பெயரில் வழங்கப்போகிறேன்.)
தி இந்துவும்  டியெம்கேயும் 
தந்தை பெரியாரின் பொருத்தமற்ற திருமணத்துக்குப் பிறகு புதுக்கட்சி துவங்க அண்ணா அவசரப்பட்டு விடவில்லை. கூட இருந்த நண்பர்களுக்கோ சலிப்பும் சஞ்சலமுமே நிறைந்திருந்தது.ஒவ்வொரு நாளும் தனி இயக்கமொன்றை துவக்க புரட்சிக்கவி பாரதிதாசன் போன்ற இயக்கத்தைச்சார்ந்தோர்  தொடர்ந்து பேசினர்.
திரைக்கவிஞர் கம்பதாசன் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை போன்ற இயக்கத்துக்கு அப்பாற்பட்டோர் பலரும் பல்வேறு யோசனைகளை சொல்லிவந்தனர்.இவற்றில் அண்ணாவை இதோ ஒரு தென்னாட்டு பெர்நாட்ஷா என்று வியப்புடன் விளித்த பேராசிரியர் கல்கியின் கடிதம் உருக்கமானதாயிருந்தது. நெடிய சிந்தனைக் குப்பிறகு..
இதுதாம்பா முடிவான பெயர் !
திராவிட முன்னேற்ற கழகம்                                                    என்று அண்ணா எழுதினார்.ஆரம்பகாலங்களில் இந்த பெயர்  Dravidan Progressive Fedaration என்றே எழுதப்பட்டது. அப்போது திமுகாவுக்கு எதிராக கருதப்பட்ட  The Hindu ஆங்கில இதழ் DPF என்ற திமுகவின் சுருக்கத்தை DMK என்று எழுதிற்று. திமுக அன்றுமுதல் டியெம்கேயாயிற்று.
-இராம அரங்கண்ணல்
இன்று தனது புதிய தமிழ் நாளிதழுக்கு தி இந்து என்று பெயரிட்டதன் வரலாறு  இப்போது புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !