சனி, நவம்பர் 16, 2013

எஞ்சினீரிங் எக்ஸ்போவில் ரோபோக்கள் !

வில்லவன் கோதை

கடந்த வெள்ளிக்கிழமை 15 11 2013 சென்னை நந்தம்பாக்கம்  வணிக மையத்தில் ( trade centre ) நிகழ்ந்த பொறியியல் பொருட் காட்சியொன்றுக்கு ( engineering expo ) போயிருந்தேன். இயல்பாகவே இதுபோன்ற காட்சியரங்குகளில் வெகுவாக விருப்பம் கொண்ட நான் இப்போதெல்லாம்  கலந்துகொள்வது இயலாமற் போயிற்று.

ஐந்தாண்டுகளுக்குமுன்னால் ஆட்டோமோஷன் துறையில் கால்பதித்த எங்கள் மருமகனின் நிறுவனம் ( mektronics automation & solution - robotics ) இன்று ராட்சஷச ரோபோக்களையும் இயக்குகின்ற திறனோடு காட்சியரங்கில்  கலந்து கொண்டது  இப்போது  எனது பயணத்துக்கு ஒரு காரணம்.
இந்தியாவைப் பொருத்தவரை ஆட்டோமேஷன்( automation ) தொழில் நுணுக்கம் விடுதலைக்கு முன்னதாகவே வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. இரண்டாம் உலகப்போரின்போது அவர்களின்  ராணுவத்தேவைக்காக ஆயுதங்களை இந்தியாவிலேயே உருவாக்க முற்பட்டபோது ஆட்டோமேஷன் நுணுக்கம் இந்தியாவுக்கு வந்தது.
நாடு விடுதலைக்குப்பிறகு
1953 ல் ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக ஆட்டோமேஷன் துறையும் துளிர்த்தது. ஹெச் எம் டி ( hmt ) நிறுவனம் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
அறுபதுகளில் தனிப்பட்ட வேலைகளுக்கான சிறப்பான எந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. எண்பதுகளில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஜப்பானியர்களின் பங்கீடு  ஆட்டோமேஷதுறை வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்த்தது. தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியாவில் தளர்த்தப் பட்ட கட்டுப்பாடுகள் ஆட்டோமேஷன் துறையை ஒரு இன்றியமையாத துறையாக்கிற்று.
நவம்பர் 14ல் இருந்து 17   வரை நிழ்ந்த இந்த பொறியியல் பெருங்காட்சியில் ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து தங்கள் அகம் புறம் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தன.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட  விசாலமான வளாகத்தில் ஆங்காங்கே குட்டி குட்டி நிறுவனங்களும்கூட களிப்போடு   கலந்து கொண்டு  தொழிற்துறையில் தங்கள் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தின.
பெரிய சிறிய நிறுவனங்களுக்காக பெரிய சிறிய நிறுவனங்கள் நிகழ்த்திய பெருங் காட்சி இது என்று ஒருவகையில்  சொல்லலாம்.
இவர்களுடைய தயாரிப்புகள்  தொழில் முனைவோருக்கு  பெருமளவில் கைகொடுக்கக்கூடியவை.. அவர்களின் அன்றாட சங்கடங்களைத் தவிற்பவை.அவர்களுக்கான நேரத்தையும்  பணத்தையும் மிச்சப்படுத்த உதவுவை .மனித உழைப்பையும்விலையில்லா மனித உயிர்க்கான பாதுகாப்பையும் உறுதி செய்பவை .துல்லியமான தரத்துடன். துரிதமாக தயாரிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்துபவை.
ஒரே சங்கடம் முன்னால் செலவழிக்கும் தொகை  ஒருவேளை  பிரமிப்பூட்டுக்கூடும்.
நுகர்வோர் நேரடியாக பயன்பெறத்தக்க காட்சிகளும் அவ்வப்போது இந்த அரங்கல் நிகழுமென்றாலும்  இந்தவகை   காட்சிகள் நுகர்வொருக்கு நேரடியாக பயன் தருவன அல்ல.


பார்வையாளர்கள் பெரிதும் தொழில் முனைவோராகவே இருந்தனர். கடலை மிட்டாய் தயாரிப்பவரிலிருந்து கார்களைஉருவாக்குபவர்கள் வரை தங்கள் தயாரிப்புக்குகந்த பாகங்களையும் தயாரிப்பில் ஏற்படும் சிக்கல்களை களைய தேவையான வழிகளையும் தேடி வந்திருந்தனர்.
 அரங்குகளை மெல்ல மெல்ல கடந்தவர்கள்  தாயும் மகனும் போன்ற பெரிதும் சிறிதுமான இரண்டு ரோபோக்கள் இருந்த எங்கள் அரங்கை காணத்தவறியதில்லை
பெரிய ரோபோ பாதுகாப்பான வலைக்கூண்டுக்குள் தான் எப்படி துல்லியமாகவும் விரைவாகவும் வெல்டிங் இணைப்புகளை செய்வேன் என்பதை திரும்பத்திரும்ப  நடித்துக்காட்டிக் கொண்டிருந்தது. தன் பணிக்கு துணையாக எவரும் இருக்கத்தேவையில்லையென்பதையும்  அது பறைசாற்றியது.
பக்கத்தில் நின்றிருந்த குட்டி ரோபோவோ  சின்னஞ்சிறு எந்திர பாகங்களை மாற்றிமாற்றி பிழையின்றி வைப்பதையும் பிசிருகளை  நேரத்தியாக  செதுக்குதையும் திரும்பத்திரும்ப செய்துகாட்டிக் கொண்டிருந்தது.
ஒரு பர்பி  செய்யும் நிறுவனம் ஒன்றுகூட தன்னுடைய தொழிற் கூடத்தில் ரோபோக்களை நிறுவ ஆவலுற்றதை காண நேரிட்டது
ரோபோக்கள் மனிதர்களைப்பார்த்து மனிதர்களுக்காக உருவாக் கப்பட்டவை. இப்போதெல்லாம் ஒரு கட்சியின் கொடிமரம் ஒன்றை நடுவதற்குக்கூட  நம்மவர்களுக்கு ஒரு பொக்லைன் தேவைப்படுகிறது.
பல்வேறு எதிர்ப்புகளை மீறி  பெருகிக்கிடந்த ஆக்ரமிப்புகளை  நொடிகளில் அகற்றுகிறது இந்த கொரிய குட்டி எந்திரங்கள். சுனாமி நிலநடுக்கம் போன்ற இடிபாடுகளை அகற்றுவதில் இது போன்ற எந்திரங்களின் பணி தவிற்க முடியாதவை.இவைகள் எல்லாமே இப்போது பெரிதாக பேசப்படும் ரோபோக்களின் அடிப்படையான  எந்திரங்கள்தாம்.குறிப்பிட்ட பணிகளுக்கென்றே உருவாக்கப்பட்டவை.
ஆனால் ரோபோக்கள் தேவைக்கேற்ற தோழனாக வடிவமைக்கப்பெற்றவை. எந்த வேலையையும் எளிதாக சலிப்பின்றி தரத்தோடு துரிதமாக செய்யக்கூடியவை. பெரிதும் சிறிதுமாக பல்வேறுஅளவுகளில் பணிகளின் சக்திக்கேற்ப  கையாளுகிறார்கள். தொழிற்கூடங்களில் ரோபோக்களின் பணிகளை நிர்ணயித்து அதற்கான சூழலை அமைக்கிறார்கள். அவை இயங்குவதேற்ற கட்டளைகளை அதன் மொழிகளிலேயே போதிக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு தேவையான பாதுகாப்பு வளையங்களையும் மறக்காமல் ஏற்படுத்துகிறார்கள்.
இப்போது  நகரைச்சுற்றி  பல்வேறு      தொழிலகங்களில்        fanuck    , a b b நிறுவனங்களின்   பல்வேறு அளவிலான ரோபோக்கள் சக்திக் கேற்ப   இரவும் பகலும் ஓய்வின்றி உழைக்கின்றன.
இப்போதெல்லாம்  தொழிலாளர்களின் காயங்களையோ  இரத்தக் கசிவையோ தொழிற்கூடங்களில் பார்க்கமுடிவதில்லை. ஞாயிற்றுக்  கிழமையோடு முடிவுக்கு வரும் இந்த பொருட் காட்சி  தமிழகத்தின் பெரும்பாலான தொழில் முனைவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.

இடுகை 0109


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !