புதன், டிசம்பர் 29, 2010

வேர்களுக்கு வயது ஒன்று ! ( 2009 டிசம்பர் 29 ஆம் நாள் )

 வணக்கம் !
சென்ற வருடம் இதே மாதம் இதே நாள்தான் வலைப்பூ வேர்கள் பிறந்தது. முதலாண்டை முழுமையாக நிறைவு செய்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 
ஒரு கணம் என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறேன் . சின்னஞ்சிறு வயதில் எழுத்து ஓவியம் போன்ற கலைகளில் பெரிதும் ஈர்ப்பு இருந்த போதிலும் கடந்த  30  ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியப்பணியில் மின்அணுவியலில் துறையில் மிகுந்த ஈடுபாடு கொள்ள நேரிட்டது. அரசுப் பணியிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்று தனித்து நின்ற போது என் மொழி எனக்காக காத்திருப்பதைக் காண நேரிட்டது. அதன் விளைவு வேர்கள் எனக்குத் துணையாயிற்று.
கடந்து போன காலங்களில் நெஞ்சில் நிலைத்து நின்ற நினைவுகளையும் நிகழ் காலங்களில் சந்திக்க நேர்ந்த தருணங்களையும் வருங்கால தொலை நோக்கு பார்வைகளையும் ஒரு சிலருடனாவது வேர்கள் மூலம் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்.
இந்த ஒரு வருட காலத்தில் எனக்கிருந்த கடமைகளுக்கிடையேயும் அவ்வப்போது குறுக்கிடுகிற பயணங்களுக்கிடையேயும் ஏறத்தாழ 36 இடுகைகளை பதிவு செய்திருக்கிறேன்.    கணினித் துறையில் போதுமான பயிறசியின்மையும் மொழியை விட்டு நெடுங்காலம் விலகியிருந்ததாலும் வேர்களை வடிவமைத்தலிலும் எழுத்தில் பிழைகளைத் தவிற்பதிலும் மிகுந்த சிறமத்தை சந்திக்க நேர்ந்தது.    மிகுதியான காலத்தையும் விரயம் செய்ய வேண்டியிருந்தது.
முதன்முதலாக இடுகைகளை பதிவிடும் போது இந்த பரந்த விரிந்து கிடக்கும் இணையத்தில் எத்தனை பேர் இந்த நீட்டோலையை திரும்பிப்பார்க்கப்போகிறார்கள் என்பதில் மிகுந்த அய்யம் இருந்ததென்னவோ உண்மை. இருந்த போதிலும் வேர்களின் எழுச்சி இந்த கோளத்தின் சகல இடுக்கிகளிலிருந்தும் எட்டிப் பார்க்கப்படுகிறது என்று அறியும் போது மிகுந்த பெரிமிதமும் ஊக்கமும் பெருகிறேன். அனைத்து தேசங்களுக்கும் புலம் பெயர்ந்த என் மொழிச் செல்வங்களுக்கும் இந்த மண்ணில் மொழிக்கு உரமாக இருப்போருக்கும் என் மகிழ்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
தங்களுக்கேற்படும் எண்ண எதிரொலிகளை
(என் நிலையாகிலும் ) அருள்கூர்ந்து மறுமொழிமூலம் வெளிப்படுத்தி வேர்களின் வளற்சியில் துணை நில்லுங்கள் !
இந்த இரண்டாம் ஆண்டு துவக்கத்தில் இன்னொரு மகிழ்வான செய்தியும் காத்திருக்கிறது.மிகுதியாக கேளிக்கை நிறைந்த வலைப்பூக்களுக்கிடையே
tamil 10 top sites தளத்தின் கண்மணிகள் வேர்கள் வலைப்பூவை முதல் இடத்துக்கு தூக்கிப்பிடித்திருக்கிறார்கள். மொழிமீது நீங்கள் காட்டுகின்ற
முக்கியத்துவமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது.
 நன்றியும் மகிழ்ச்சியும் .
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து.....
இடுகை 0036      29 - 12 - 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !