ஞாயிறு, ஜனவரி 05, 2020

குற்றமும் தண்டனையும் !


ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்டு   உயிரோடு கொளுத்தப் பட்ட நிகழ்வும் அதனைத்தொடர்ந்து அந்த  நான்கு குற்றவாளிகளைக் காவல் துரையினர் என் கவுண்டரில் வேட்டையாடிய நிகழ்வும் இந்த தேசத்தையே அதிர்வுக்குள்ளாகியிருக்கிறது.
சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்ட அந்த காவல் ஆய்வாளரை பொதுமக்களும் பத்திரிக்கைகளும்  பெரிதும் போற்றிக் கொண்டாடியிருக்கிறன..
சமூகவலைதளங்களும் ஊடகங்களும் அவர்களின் செயலை பெரிதும் மெச்சியிருக்கின்றன.
குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகளுக்கும்  மனித உரிமைகள் சார்ந்த இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும்  இந்த நிகழ்வு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான்.
என்னைப்பொறுத்தவரை அந்த குற்றவாளிகளுக்கு தரப்பட்ட தண்டனை சரியானதுதான் என்றாலும்.அதை நிறைவேற்றுகிற  உரிமை ஒரு அரசு ஊழியருக்கு இல்லை என்பதுதான். குற்றவாளிகள் 
தப்பிக்க முயன்றபோது தற்காப்புக்காக சுட்டுக் கொன்றோம் என்ற அவர்களுடைய வாக்குமூலமே அவர்கள் சட்டத்தைத் தாண்டி செயல்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்த்தும்.
இந்த நிகழ்வில் மக்களின் மகத்தான மகிழ்வுக்கும்  ஊடகங்களின் ஒத்திசைவுக்கும் தலையாய காரணம் எதுவாக இருக்க முடியும்.
கடந்த காலங்களில்  தமிழகமெங்கும்  இருண்ட  இரவுகளில் அல்ல ,பட்ட பகல்வெளிகளில் பேரூந்து நிலையம் , ரயில்வே நடைமேடைகள் , ஜனத்திரள்மிக்க கடைவீதிகள் என்று மக்கள் மிகுதியாக நடமாடுகின்ற பல்வேறு இடங்களில் புசிக்கின்ற விலங்குகளை வெட்டி சாய்ப்பது போல் பூப்போன்ற சக மனிதர்கள் வெட்டி  சாய்க்கப்பட்டதை பார்த்திருக்கிறோம்..அதற்கு காரணமான  அத்தனை குற்றவாளிகளும் இன்னமும் வெளியேதான் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர்..அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டாலும் நீதிமன்றங்களில் விசாரணை மாதக்கணக்காக வருடக்கணக்காக நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த மந்த நிலையே மக்களிடம் பெரும் வெறுப்பையும் மிகுந்த சலிப்பையும்  ஏற்படுத்தியிருக்க்கூடும்..
இதற்கு என்ன செய்யலாம்.
வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்குஏற்ற தண்டனையை நிறைவேற்றுவதே வழியாக இருக்க முடியும். அதற்கான முயற்சிகளை ஆந்திர அரசு எடுத்திருக்கிறது.
இதே மாதிரியான ஒரு நிகழ்வைத்தான் மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்  குறுநாவல் பேசுகிறது
கண்ணெதிரே நிழும் ஒரு கொடூரத்தை  கண்டும் காணாமல் கைகட்டி நிற்பவனே கொரைகாரனைவிட கொடியவன் என்று இந்த குறு நாவலில் பேசுகிறர் தண்டாயுதம்..
இந்த நாவலைப்பொறுத்தவரை ஆசிரியர் குறுக்கீடுஅறவே இல்லை.நிகழ்வுகளைச் சொல்லி பெரும்பாலான தகவல்களை வாசகர் சிந்தனைக்கே வழிவகுத்திருக்கிறேன்.

இந்த குறு நாவலின் மூலம் உங்கள் உள்ளங்களை தொட்டுவிட முயன்றிருக்கிறேன். அவ்ளவுதான்..

லிங்கை க்ளிக் செய்யவும். 


மறைமலை 


நகர்ரயில்வே 


ஸ்டேஷன்: குறு நாவல் 


(Tamil Edition) Kindle Edition


Follow the Author

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்: குறு நாவல் (Tamil Edition) by [g, pandian]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !