திங்கள், செப்டம்பர் 24, 2012

அவர்கள் அப்பாவிகள் !


கூடங்குளம் சார்ந்த கட்டுரை
வில்லவன் கோதை

இந்த தேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது அன்னியமுதலீடுகள் கணிசமான அளவுக்கு இந்த மண்ணில் நுழையத்தொடங்கின..தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பும்  தாராளமான மனித உழைப்பும் இந்த மண்ணில் மிகுதியாக இருப்பதைக்கருதியே அன்னிய நிருவனங்கள் ஆர்வமாக கடை விரித்தன
தேசத்தின் வளர்ச்சிக்கும் படித்த இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் இந்த அன்னிய முதலீடுகள் பயனளிக்கக்கூடும் என்று கருதியே இந்திய அரசும் மாநில அரசுகளும் மிகுதியான சலுகைகளை நீட்டி அன்னிய நிருவனங்களை கூவியழைத்தன.
அதைத்தொடர்ந்து அன்னிய முதலீடுகள் மூலம்  ஏற்பட்ட வளர்ச்சி நாடு முழுதும் சீராக பரவாவிட்டாலும் பெருநகரங்களை சூழ்ந்திருந்த பெருமபாலான வரட்சிப்பிரதேசங்கள் இப்போது புதுப்பொலிவு பெற்றிட காரணமாய் இருந்திருக்கிறது.
ஒருவன் ஊதியத்தில் ஒன்பது பேர் உண்டு களித்த காலம் மாறி ஒன்பதுபேரும் கணிசமாக சம்பாதிக்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
தென் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களில் இப்போதெல்லாம் வடமாநில இளைஞர்கள் அடிப்படை வேலைகளுக்கு கீழே இறங்கி வந்திருப்பதை பார்க்கமுடிகிறது.
மேற்தட்டு மக்கள் மட்டுமே நடமாடிய வணிக வளாகங்களிலும் பொழுதுபோக்கு தளங்களிலும் இப்போதெல்லாம் நடுத்தர வர்கத்தின் நடமாட்டத்தை மிகுதியாக காணமுடிகிறது
அங்காடித்தெருக்களிலும்  பேரூந்துகளிலும் கேட்ட தொகையை வாய்மூடி கொடுக்கற காட்சிகளை காணமுடிகிறது. மிச்ச சில்லரை கொடுக்காத நடத்துனரிடம் வாய்ச்சண்டை செய்பவர் எவரையும் இப்போதெல்லாம் காணமுடிவதில்லை.
உணவு விடுதிகளில் வெகுமதி கொடுக்காத வாடிக்கையாளர் இருப்பதாக தெரியவில்லை.
 வழக்கமாக  use and thro  என்று வெளிநாடுகளில் பேசப்படும் வாக்கியங்கள் இன்றைக்கு இந்த நாட்டிற்கு பரிச்சயமாயிருக்கிறது.
வெண்ணை திரளும்போது தாழி உடைந்ததாக பேசப்படுவதை கேட்டிருக்கிறோம். அன்னியமுதலீடுகளில் ஆர்வம் இருந்த அளவுக்கு அடிப்படை மின் உற்பத்திக்கு ஆளுவோர் கடந்த காலங்களில் ஆர்வம்  காட்ட மனமும் நேரமும் இருக்கவில்லை.
இன்றைக்கு தேவையான மின் சக்தியை பகிர்ந்தளிக்கவே இன்னும் பன்னிரண்டு விழுக்காட்டுக்கு வழி தெரியவில்லை.  அசுர வளர்ச்சிக்கு இருக்கிற மின் சக்தியை பங்கு போட  இப்போதே மூச்சுதிணற வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இன்னும் பத்தாண்டுகளில் இந்த தேசத்தின் மின தேவை இருமடங்காக பெருக்கக்கூடுமென்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
நவீன கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் பெருகப் பெருக அதற்கான அடிப்படை எரிபொருளின் தேவையும் அதிகரித்தே வந்திருக்கின்றன. ஒவ்வொரு தேவைகளுக்கும் மாற்றாக கண்டறிந்த மின்சாரத்துக்கு ஒரு மாற்று  வேரொன்று இல்லையென்ற நிலைதான் இப்போது இருக்கிறது
நீர் மின்சாரம் ( hydro energy ) , அனல் மின்சாரம் ( thermal energy ) ,     இயற்கையில் எடுக்கப்படும் மின்சாரம் ( renewable energy  ) என்ற வகையில் நான்காவதாக இடம் பெற்றிருக்கும் அணு உலைகள்தாம் வருங்கால கடும்பசிக்கு ஈடு கொடுக்க முடியும் என்பதில் வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது
நாட்டின் பெருவாரியான நதிகள் வரண்டுவிட்டதால் இனி நதிநீர் மின்சாரம் கனவுக்குறியதாயிருக்கிறது.
உற்பத்தி செலவினங்கள் உச்சத்தை தொட்டாலும் அடிப்படை தேவையான நிலக்கரிக்கேற்பட்டிருக்கும் வரட்சி அனல்மின் நிலையங்களை மறக்கத்தூண்டுகிறது.
காற்றாலையும் சூரியொளியும் கூட மின்சக்தி தருமென்றாலும் நம் ஞானிகள் பேசுவதைப்போல இன்றைய கோரப்பசிக்கு ஒருபோதும் பயனளிக்க போவதில்லை.

அபாயமற்ற நவீன கண்டுபிடிப்புகள் என்று எப்போதுமே இருந்ததில்லை. கண்டுபிடிப்புகளை சார்ந்த அறிவு அதை கையாளும்போது மேற்கொள்ள வேண்டிய கவனம் மட்டுமே பேரழிவுகளை தடுக்கக்கூடும்.
பலன்களை அபரிதமாக எதிபார்க்கப்பார்க்க எதிர் கொள்ள வேண்டிய ரிஸ்க்கும் அதிகரிக்கக் கூடும்.
இந்த வரிசையில் பூமிக்கடியில் பதைந்து கிடக்கும்  யுரேனியத்தை பிளந்து மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளை தவிற வேரொன்றும் இருப்பதாக தெரியவில்லை.குறைந்த முதலீட்டில் அபரிதமான சக்தி உலகம் மாசுபடுதலில்இருந்து மீட்க்கின்ற அற்புத வாய்ப்பு...அணு உலைகளால் மட்டுமே முடியும்.
எதிர்கால தேச வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1988 ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும்      ரஷ்யப்பிரதமர் கோர்பசேவுக்கும் இடையே கையெழுத்தானதே இன்று பெரிதகப் பேசப்படும் கூடங்குளம் அணு உலைத்திட்டம். அடுத்தடுத்து நிகழ்ந்த ரஷ்ய கூட்டமைப்பின் சிதறல்கள் உலகளாவிய அணுக்கழகத்தின் தடை ஏரத்தாழ பத்தாண்டுகளுக்குமேலாக இந்த திட்டத்தை தூசி படியச் செய்தது மீண்டும் 2001 தூசி துடைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திட்டம்   wer 1200  வகை 1000 m w திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை 37000 கோடி செலவில் தூத்துகுடி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்க வழிவகுத்த்து..
தொடர்ந்து நாட்டின் அசுர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க  2008 ல் கூடுதலாக மேலும் 1170 mw திறன் கொண்ட  ஆறு  உலைகளுக்கு வழி செய்தது
எப்போதுமே நேசநாடான ரஷ்யாவின் துணையோடு 1962 ல் நெய்வேலியில் நிர்மாணிக்கப்பட்ட முதன் அனல் மின்நிலையம் இன்னும் நம் தேவைக்கு கைகொடுத்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கூடங்குளம் கடற்பகுதியிலிருந்து ஒன்றறை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறிய துறைமுகத்துடன் 2004 ஜனவரியில் இந்த திட்டம் துவக்கப்பட்டபோது மக்களின் மகத்தான எதிர்ப்பு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. 2011 ல் ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த புகிஷிமா அணு உலை சிதறலுக்குப்பிறகு அப்பாவி மக்களை அணு உலைக்கு எதிராக திரட்டுவதில் அந்தபகுதியை சார்ந்த தொண்டு நிருவனங்கள் வெற்றியை பெற்றன. இருந்த போதிலும் எந்வொரு நாட்டிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவில்லை.விபத்துகள் பெரும்பாலும் அடுத்தகட்ட பாதுகாப்புக்கு நகரவேண்டுமேயன்றி மூட்டை கட்டுவதற்க்கல்ல.

இயற்கையின் தாக்குதல்களால் ஜப்பானிய அணு உலைகளுக்கு ஏற்பட்ட பேரழிவை உலகெங்கும் பேசப்பட்டது உண்மைதான். அந்தபேரழிவில் அசாத்திய திறமையால் மனித பேரழிவை தடுத்து மறுபடியும் துளிர்த்தெழுந்துள்ளதை பார்க்கவேண்டும்.  2011 ல்பெரிதும் வீழ்ச்சியடைந்த ஜப்பானிய என் நாணயம் ஓராண்டுக்குள் துளிர்த்தெழுந்திருப்பதை காணலாம்.
ஜப்பானுக்கு நிகழ்ந்த பேரழிவுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு.இயற்கை பேரழிவில் சிக்கிய ஜப்பான் மீண்டும் துளிர்த்தெழ அணு உலைகளால் மட்டுமே முடியும்  என்பதை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்று கலவரபூமியாக காட்சி தரும் கூடங்குளம் அணு உலைகளுக்கு சாதகமான நிலம்தான்.அதனால் வாழ்வாதாரம் இழப்பவர்கள் இல்லாமல் இல்லை. அதை ஈடு செய்யும் பொருப்பு ஆளுகின்ற அரசுகளுக்கு உண்டு.
ஏரத்தாழ இருபதுக்கு  மேற்பட்ட அணு உலைகள் 5000 m w  திறனுடன் இந்த மண்ணில் முன்னதாக இயக்கி கொண்டிருக்கிறோம். இதுவரை எந்தவொரு பேரழிவும் ஏற்பட்டுவிட்டதாக  நினைவில்லை.மக்கள் பெருக்கம் மிகுந்த சென்னைக்கு அருகில்தான் கல்பாக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சமீபத்திய ஜப்பானிய புகிஷோமா விபத்துகளிருந்தும் கடந்த கால அணு உலைகளிலிருந்தும் ஏராளமான பாடங்கள் கற்றிருக்கிறோம். அந்த அசாத்திய அநுபவம் கூடங்குளத்தை பாதுகாப்பு வளையத்துக்கு கொண்டுவர போதுமானதாகும்.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசுகளும் தம்தம் வரம்புக்குட்பட்ட பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு தீட்டுகின்ற திட்டங்களில் மாநில அரசுகட்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக்கூடும். அவை அத்தனையும் விவாதிக்கப்பட வேண்டியவையே. இருந்த போதிலும் கொள்கை ரீதியா ஏற்றுக்கொண்ட திட்டங்களை நடுவண அரசு செயல்படுத்தும்போது மாநிலத்தை ஆளுகின்ற அரசுகள் பக்கதுணையாக இருக்கவேண்டும். மாறாக நடுநிலை எடுத்து கருத்து வேறுபாடுகளை விதைக்க்க்கூடாது.ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கிருக்க வானளாவிய அதிகாரங்களைக்கொண்டு மத்ய அரசின் பொதுவான திட்டங்களுக்கு மாறாகவும் நீதிமன்ற ஆணைகளை செயல்படுத்துவதில்கூட  சுணக்கமாகவுமே இருந்து அவை மாற்றுக்கட்சி அரசு என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. என்னதான் ஜனநாயக அமைப்பாக இருந்தாலும் அரசின் அத்தனை முடிவுகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளமுடியாது என்பதை உணரவேண்டும் ராணுவ ரகசியங்களைப்போல.
இந்த திட்டத்துக்கான ஆய்வுகளை தொடங்கி ஏரத்தாழ இருபது ஆண்டுகள் கடந்தபோதும்  மாநில அரசும் அங்கீகரம் பெற்ற அரசியல் இயக்கங்களும் இந்த பிரச்சனையில் மௌனம் சாதித்து தங்கள் அயோக்கியதனங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.
படித்த இளைஞர்கள் பாமர்ர்களுக்கு புரியவைப்பதை தவிற்த்து சேர்ந்து இசைத்து வருகின்றனர்.
 ஏரத்தாழ 14000 கோடிக்கு மேலாக செலவிட்டு ஒரு திட்டம் செயல்படத்துவங்கும்போது ஒட்டு மொத்தமாக இழுத்து மூடச்சொல்வது என்ன அறிவு.இப்போதுதான் 50 கோடிக்கு மேல் செலவிட்டு தமிழர்தம் நெடுநாள் கனவுத்திட்டமான சேது சமுத்திரம் திட்டத்தில் மண்ணைக் கொட்டி மூடியிருக்கிறோம்.
வளர்ந்துவரும் இந்த நாட்டில் கொடிகட்டி பறக்கும் லஞ்ச லாவண்யத்தையும் தாண்டி மிஞ்சி கிடைக்கிற மனித உழைப்பை இப்படி வீணாக்கலாமா.
மக்கள் எதிர்க்கிறார்கள் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று தங்கள் அவலங்களுக்கு மக்களை கேடயமாக பயன் படுத்தவோர் கவனிக்கவேண்டும்.தொலைக்காட்சிகளில் காட்டப்படும் அந்த மக்களை கவனியுங்கள். அறியாமல் செய்யும் அவர்கள் பிழையை உணருங்கள்!
அவர்கள் அப்பாவிகள்.


இடுகை 0098
உங்கள் உணர்வுகளை மறுமொழிமூலம் வெளிப்படுத்துங்கள் !

5 கருத்துகள்:

  1. விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்...

    ஆனால் இந்த விசயத்தில் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை... (இவர் தேவையா என்று...?)

    தினம் / வாரம் / மாதம் - ஒரு மரம் நடுவோம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பெயரற்றவற்கு
    நன்றி.உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியிருந்தால் மகிழ்வேன்.

    நண்பர் தனபாலனுக்கு
    உங்கள் பார்வையும் மறுமொழியும் மகிழ்வளிக்கிறது.
    இந்த விஷயத்தில் முடிவுக்கு வரமுடியாத கருத்தாக எதை கருதுகிறீர்கள்.எந்த ஒரு நிகழ்விலும் சாதகமும் பாதகமும் சேர்ந்தே இருக்கின்றன.
    அளவுகளை கருத்தில் கொண்டே எடுத்துக் கொள்ளவேண்டுமென நினைக்கிறேன்.
    அது என்ன இவர் தேவையா என்று ...
    விளங்கவில்லையே.

    பதிலளிநீக்கு
  3. //இப்போதுதான் 50 கோடிக்கு மேல் செலவிட்டு சேது சமுத்திரம் திட்டத்தில் தேசியக்கவிஞன் பாரதியின் கனவில் மண்ணைக்கொட்டியிருக்கிறோம்.//
    BHARATHI EPPODHU KALVAI VETTI KAPPAL OTTA SONNAR? ''SINGALA THEEVRKU '' PALAM THAN AMAIKA SONNAR! SETHU SAMUDHTAM MATRUM KOODANKULAM ERANDUME ARASIALVATHIKALIN KANAVUTHITAM THAN.......

    பதிலளிநீக்கு
  4. அன்பு செந்திலுக்கு
    பிழையை சுட்டிகாட்டியதற்கு நன்றி.சேது கால்வாய் திட்டத்துக்கான பிள்ளையார் சுழி 18 ஆம் நூற்றாண்டிலேயே போடப்பட்டுவிட்டதை அறிகிறேன்.அதனுடைய தொடர்ச்சியை கருதியே தமிழர்தம் கனவு என்று குறிப்பிட்டிருக்கேறேன்.சேது திட்டம் சாத்யமானது என்று அறிவித்த்து வெரும் அரசியல் வாதிகளல்ல.

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !