திங்கள், ஜூலை 15, 2013

தமிழ்க்கடல் மறைமலை அடிகள் !


தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்தாயிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் !
வேர்கள் எண்ணிப் பார்க்கிறது.
15 ஜூலை 1876 ல் நாகப்பட்டினத்தை சார்ந்த காடம்பாடியில்  சொக்கநாதர் – சின்னம்மைக்கு மகனாய் பிறந்தார்.
தனித்தமிழ் இயக்கம் கண்டபோது வேதாசலம் என்ற இயற்பெயரை மறைமலை என்று தமிழாக்கிக்கொண்டார்.
இவருக்கு சவுந்தரவல்லி என்ற துணையும் மூன்று மகள்களும் நான்கு ஆண் மகவும் உண்டு தமிழ் ஆங்கிலம் வடமொழி மூன்றிலும் புலமைபெற்ற அடிகளார் சமயம் மெய்பொருளியல் இலக்கியம் மருத்துவம் புதினம் ஆராய்ச்சி , கட்டுரை , நாடகம் , கதை , அறிவியல்,  வரலாறு போன்ற எண்ணற்ற துறைகளில் 56 க்கு மேற்பட்ட நூல்களை படைத்தார்.
திருவள்ளுவர் ஆண்டை கி மு 31 என்று நிறுவியவர் அவரே.
பொது நிலைக்கழக தோற்றம் 22 04 1911
பல்லவபுரம் வாழ்க்கை 01 05 1911
துறவற வாழ்க்கை தொடக்கம் 27 08 1911
தனித்தமிழ் இயக்கம் 1916
1997 ஆகஸ்ட் 4 ல்  அவரது நூல்கள் அரசுடமையாக்கப்பட்டது.2007 
ஆகஸ்ட் 1717 ல்அடிகளாருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு மத்தியரசு சிறப்பு செய்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !