வணக்கம்.
அமாசான் அறிவித்திருந்த
pen to publish 2019 க்கான புத்தகவருகை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.எத்தகய மதிப்பீடுகளை முன் வைத்து அமேசான் தரநிர்ணய எந்திரம் புத்கங்களை வரிசைப்படுத்தப் போகிறதோ விளங்கவில்லை. இறுதி முடிவுகளை இரண்டு எழுத்துலக பழைமையும் புதுமையும் இணைந்து அறிவுக்கக்கூடுமென்று அறிவித்திருக்கிறார்கள்.
பதினாலு வயதிலேயே பத்திரிக்கைகளில் எழுதிய அனுபவம் உண்டென்றாலும் மின்வாரியப்பணி கிடைத்தபிறகு எல்லாம் நின்று போயிற்று. பணியிலிருந்து விடுபட்ட போதுதான் என்னை நான் புதுப்பித்துக் கொண்டேன்.அரசியல் சமூகம் இலக்கியம் சார்ந்த துறைகளில் அடிக்கடி மூக்கை நுழைத்து அவ்வப்போது புனைவுகளையும் எழுதி வந்தேன் இயல்பிலேயே. பகுத்தறிவு சார்ந்த எண்ணங்களையும் திராவிட சிந்தனைகளையும் பெற்றிருந்த நான் எப்போதுமே பொழுதைப் போக்குகின்ற எந்த எழுத்தையும் எழுதியதில்லை மூடநம்பிக்கைகளுக்கும் சமூக சிந்தனைக்கெதிரான கருத்துகளுக்கும் செரிவைட்டும் எழுத்துக்கள் என் அடையாளமில்லை..
இந்தப் போட்டிக்காக மூன்று மின்புத்தகங்களை பதிப்பித்திருக்கிறேன். அந்தப்புத்தகங்கள் மூன்றும் அமேசான் வரிசையில் மணிக்குமணி தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.
எது இப்படி இருந்தாலும் இந்த நகர்வுகள் அத்தனையும் உங்களையன்றி அணுவளவும் அசைந்திடாது என்பது நிச்சயம்.
இந்த புத்தகங்கள் இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏரத்தாழ நூற்றி தொண்ணுற்றைந்துக்கு மேற்பட்ட படிகள் தரவிறக் கப்பட்டிருப்பது பெரிதும் மகிழ்ச்சியே
தரவிறக்கி வாசித்த நண்பர்கள் தங்கள் உள்ளுணர்வுகளை அவசியம் amazon review வில் வெளிப்படுத்த வேண்டும். ஒருபோதும் உங்களிடம் நான் தேவைக்கதிகமான நட்ச்சத்திரங்களை கேட்கமாட்டேன்.ஒன்றுக்குகூட தகுதியற்றதாகத் தோன்றினால் மறுபடியும் மறுபடியும் உங்களிடம் வருகிறேன். நன்றி.!.
வில்லவன்கோதை ( பாண்டியன்ஜி)
1 மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன். ( குறு நாவல் )
2 மனப்போக்கு ( MENTALITY ) சிறு கதைகள்
3 எதர்க்காக அழுதான் ? ( குறு நாவல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !