செவ்வாய், ஜூலை 20, 2010

இலக்கிய வீதி இனியவன்

சென்னையில் ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து 17 ஜுலை 2010 அன்று நடத்திய பாராட்டு விழாவில்  எழுத்தாளர்கள் ராணி மைந்தன் , இலக்கிய வீதி இனியவன் ஆகியோரை புகழ்ந்து கெளரவிக்கிறார் ஆர்.எம். வீரப்பன்.
(எழுத்தாளர் சிவசங்கரி ,ஏவி எம் சரவணன் , ராணி மைந்தன் ஆர் . எம் , வீரப்பன் , இனியவன் ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி , சுகி . சிவம் )                                                                  
 தினமணிக்கு நன்றி !

( இனிய நினைவுகள் )
 பாண்டியன் ஜி (வில்லவன் கோதை )

 இந்த ஜுலை மாதம் 18 ஆம் தேதி  தினமணி நாளிதழில் வெளியான ஓர் செய்தி என் நினைவுகளை  பெரிதும் பின்னோக்கிச் செல்ல உதவியது.
 1959 என்று நினைக்கிறேன்.
தமிழ் பத்திரிக்கை உலகம் மீண்டும் தலையெடுத்த காலம். 
விகடன் , கல்கி , குமுதம் போன்ற முன்னணி இதழ்களுடன் தீபம் கணையாழி போன்ற தரம்வாய்ந்த சிற்றிதழ்களும் முளைத்து செழித்திருந்த சமயம் .
பிஞ்சு நெஞ்சங்களுக்கு வழிகாட்ட சின்னஞ்சிறு குழந்தையிதழ்களும் துளிர் விட்டிருந்த நேரம் 
இன்றுபோல் தமக்குத்தாமே கட் டவுட் நிறுவிக்கொள்வதும் தம் எழுத்துகளை தாமே பிரசுரித்துக்கொள்வதும் தமக்குத்தாமே மாலை அணிவித்துக் கொள்வதும் ,தம் அற்பச்  செயல்களுக் கெல்லாம் தாமே கைகொட்டி மகிழ்ந்து கொள்வதும் அன்று அத்தனை எளிதன்று . பட்டங்களையும் பரிசுகளையும் பணம் கொடுத்து பெற முடியாத நேரம்.
  முன்னணி இதழ்களில் ஒரு ஓரத்தில் இடம் பிடிப்பதென்பது அன்று பெரும்பாலோர்க்கு பகற் கனவாகவே இருந்திருந்தது .  அன்றெல்லாம் ஜாதிய பின்னணியும் அரசியல் தலைவர்களின் ஆசியும் இன்றி ஆனந்த விகடன் , கல்கி , கலைமகள் இதழ்களில் எவரும் எழுதிட இயலாது. மிகச்சிறந்த பெண் எழுந்தாளர் சிவசங்கரிக்கே அவர் எழுத்துக்களை பிரசுரிக்க அன்நாளில் சிபாரிசுக்கடிதம்  தேவைப்பட்டிருந்தது. 
அந்த காலகட்டங்களில் சிறுவர்களைக்கவர்ந்த இதழ்களாக
ஏழு எட்டு மொழிகளில் வெளயிடப் பெற்ற  அம்புலிமாமா , 
கலைமகள் குழுமம் வெளியிட்ட கண்ணன் , 
குமுதம் நிறுவனத்தின் கல்கண்டு
இவை மட்டுமே விற்பனையில் முன்னணியில் இருந்தன. இவைகளுக்கு இயல்பாகவே வலுவான பின்னணி இருந்ததால் சிரமமின்றி நீடிக்கவும் செய்தன.அம்புலிமாமா தேர்ந்த சித்திரங்களுடன் நேர்த்தியான அச்சுமுறையில் புராண இதிகாச மாயாஜாலக் கதைகளுடன் தன் இடத்தை வசதியுள்ளோரிடம் தக்க வைத்துக்கொண்டிருந்தது. அன்று விலை சற்று அதிகம்தான். 
.குமுதம் குழுமம் வெளியிடும் கல்கண்டு முழுவதும் தமிழ்வாணன் எழுத்துக்களையே வெளியிட்டு   இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தது.
இவற்றில் கலைமகள் நிறுவனம் வெளியிட்ட கண்ணன் சற்று வித்தியாசமானது. பிஞ்சு நெஞ்சங்களின் அச்சத்தை அகற்றி பழங்கால பெருமைகளை மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்குத்தேவையான விஞ்ஞான யுத்திகளையும் வெளியிட்டு  தரத்தில்  தனித்து  நின்றது. 
இன்று எழுத்துலகில் நிலைத்து நிற்போர் பெரும்பாலும் கண்ணனின் தூண்டுதலில் துளிர் விட்டோர்தாம். எல்லாரைப்போலவே மாதமிருமுறை வெளி வந்த  கண்ணன் இதழுக்காக இரண்டு வாரம் பொறுத்திருப்பது என்பது அப்போதெல்லாம் என்சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. பின்நாளில் மின்னணுவியலில் இயல்பான விருப்பத்தோடு 36 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியதற்கு கண்ணனில் வெளியான  விஞ்ஞானம் சார்ந்த தொடர் கட்டுரைகளே காரணமாய் இருந்திருக்கிறது.
அந்நாளில்  திருத்தருப்பூண்டி ரயில் நிலையத்தில் பத்திரிக்கை கட்டு இறக்கியவுடன் முதல்முதலில் கண்ணனை உறுவியெடுப்பவன் நானாகத்தான் இருந்தேன். பெரும்பாலும் வீடு வருவதற்குள் அத்தனை பக்கங்களையும் படித்து முடித்திருப்பேன். படிப்பதும் மட்டுமின்றி எழுதும் திறனையும்  எனக்கு ஊட்டி வளர்த்தது கண்ணன்தான். அதன் ஆசிரியர் ஆர்வி என்ற ஆர்.வெங்கடராமன் அற்புதமான மனிதர். எத்தனையோ இன்றைய எழுத்தாளர்களை அன்றே இனம்கண்டு ஏணியில் ஏற்றிவைத்தவர் அவர்தாம்.. 
இருந்தபோதும் கலைமகள் குழுமத்தின் கண்ணன் மஞ்சரி   ( வேற்று மொழிச்செல்வங்களை தமிழுக்கு கொண்டுவந்த அற்புதமான இதழ் )   இதழ்கள் தொடர்ந்து நீடிக்காமற்போனது  வளரும் குழந்தைகளின் துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
 அந்நாளில்அவ்வப்போது என்னுடைய சின்னஞ்சிறு எழுத்துக்கள் பிரசுரிக்கப்படும் போது நான் கால்களால் நடந்ததாக நினைவில்லை. சுறுங்கச்சொன்னால் எனக்கு மொழியை அறிமுகப்படுத்தியது கண்ணன் இதழும் தொடர்ந்து வந்த திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும்தாம். அதற்குபின்தான்  நான் பயின்ற கல்விக்கூடங்களைச்சொல்லவேண்டும்.
 1962 ல் வழக்கம்போல் நெடுங்கதைப்போட்டியை அறிவித்தது. கண்ணன். முதன் முதலாக ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். காலமும் சூழலும் ஒத்துழைக்கவில்லை. முடிவுகள்அறிவிக்கப்பெற்றன. முடிவுகள் எனக்கு சாதகமாக அமையாவிட்டாலும்  எனது முயற்சி எனக்கு  நிறைவையே தந்தது.
முதற்பரிசை தட்டிச்சென்றவர்  
வேடந்தாங்கல் இலக்குமிபதி என்ற இனியவன்.
சரியான தேர்வு என்றே சொல்ல  வேண்டும்.
அவருடைய முதற்பரிசு பெற்ற பொன்மனம் நெடுங்கதை சிறுவர் இலக்கியத்தில் வழக்கத்திலிருந்து பெரிதும் மாறுபட்டு வளரும் புதிய தலைமுறைக்கு நல்ல  நம்பிக்கையை விதைப்பதாகத்தான் இருந்தது . போட்டியில் பங்குபெற்று தகுதி பெறாவிடினும் இனியவனின் நெடுங்கதைக்கு  மதிப்புரை எழுதி அப்போதே வேறு பத்திரிக்கை ஒன்றில்  முதற்பரிசு பெற்றதை இப்போது  எண்ணிப்பார்க்கிறேன். 

   
அதையடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழக இதழ்களில் இனியவன் எழுதிவந்ததை அறிவேன். பின்நாளில் அவர் வாசகர் வட்டம் இலக்கியவீதி என்று பல்வேறு அமைப்புகளை நிறுவி நல்ல எழுத்துக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிவந்ததை தொடர்ந்து வந்த பத்திரிக்கைகள் மூலம் அறிந்திருக்கிறேன்.எழுத்து மட்டுமின்றி தரமான பேச்சுத்திறனும் நிறைந்தவர் இனியவன்.சென்னை கம்பன்கழக செயலாளர் பொறுப்பும் அவருக்கு பொருத்தமானதே. மிகமிக சாமான்யர்களின் உயரிய எழுத்துக்களை தமிழ் வாசகர்முன்னே எடுத்துச்சென்ற இனியவன் தகுதியானவர்களுக்கு உயரிய இருக்கைகள் கொடுத்து சிறப்பித்தது மறக்க இயலாதது. தரம்பார்த்து தமிழ் எழுத்துக்களை தூக்கிப் பிடித்த இனியவனின் கரங்களுக்கு கிருஷ்ணகான சபாவும் கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனமும் இணைந்து அணி செய்திருப்பதை அறிந்து நானே பெற்றதைப்போல எண்ணி மகிழ்கிறேன். 
எழுத்தாளர் ராணிமைந்தனின் எழுத்துக்களையும் அறிவேன்.
இனியவனும் ராணிமைந்தனும் நீண்டு வாழ்ந்து தொடர்ந்த பணிகளை மேலும் தொடர விழைகிறேன்.

இடுகை 0027 -- 20 ஜுலை 2010
-------------------------------------------------------------

இந்த பதிவுக்கு மூன்றாண்டுகளுக்குப்பிறகு கிடைத்த வெகுமதி.( 1 ஜூலை 2013

Message via  Google Profile:
vanakkam ayya.
i'm vasuki daughter of mr Iniyavan. just now only i read your message about appa. which you
have published three years back. appa also heard. he asked me to convey his thanks and wishes to you. he
was so sick for past three months, now only slowly recovering. at this time it is like a booster for him,
Saraswathan said you are so great and generous to share about others.. thank you so much for your affection,
care and concern ayya i read few of your writing to appa. he enjoyed your style and views.
bless you ayya. regards..
vasuki..

2 கருத்துகள்:

  1. மற்றவர்களின் புகழில் பெருமைப்படும் இனிய உள்ளம் எல்லோர்க்கும் அமைவதில்லை.ராணி மைந்தன் மற்றும் இனியனின் படைப்புக்களுக்கு கிடைத்த வரவேற்பினை வாழ்த்தி அருமையான ஒரு இடுகையை தந்தமைக்கு பாராட்டுகள். நானும் அந்நாளில் கண்ணன், கலைமகள், மஞ்சரி பத்திரிகைகளின் தீவிர ரசிகன். என்னுடைய பதிவில் தமிழில் சிறு கதைகள் எழுதி இருக்கிறேன், உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    Saraswathan

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்குரிய சரஸ்வதன் தாங்கட்கு
    தங்கள் மறுமொழி மகிழ்ச்சியளிக்கிறது.
    இனிய....பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !