திரு சம்பத்  அவர்கள் -தலைமைப் பொறியாளர் -தமிழ்நாடு மின்வாரியம்.
ஏறதாழ முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஈரோடு நகரில் உங்களோடு எனக்கு ஒரு அறிமுகம் கிட்டிற்று. அதற்குப்பின்னால் பல நேரங்களில் உங்களை விட்டு நெடுந்தொலைவில் இருந்தவன் நான் இருந்த போதிலும் உங்களின் அடுத்தடுத்த நகர்வுகளை தொடராக அறிந்திருக்கிறேன்..
ஒருகாலத்தில் உங்கள் பெயர் தமிழ்நாடு மின்வாரியம் முழுதும் எட்டியிருந்தது. அண்டைமாநில ஒரங்களில்கூட உங்கள் பெயர் உச்சரிக்கப்பட்டது. அதற்கான காரணம் எல்லாம் உங்கள் சகோதர சிந்தனைகளே.
உங்கள் பணிகளில் எதையும் முடியாதென்று நீங்கள் மறுத்து நான் பார்த்தில்லை எந்த வகையிலாவது உங்கள் பணிகளைத் தொய்வின்றி தாங்கியது உங்களின் ஒருவகை நிர்வாகத்திறன்தான். .உங்களைப்பொறுத்தவரை நிதி ஆதாரம் என்பது ஒரு பொருட்டே அல்ல..சக ஊழியர்கள் தோளோடு தோள் சேர்த்து தேநீர் அருந்துவது உங்கள் வழக்கமான இயல்பு. பணியாளர்கள் எவரும் உங்கள் அதிகாரமுகத்தை ஒருபோதும் உணர்ந்ததேயில்லை. அப்படியொன்று இருந்தால்தானே அவர்கள் உணர்வதற்கு.
தமிழில் நீ என்ற ஒரு எழுத்தின் இறுப்பை நீங்கள் அறிந்திருக்கவில்லையோ.என்ற ஐயம் எனக்குண்டு. 
இன்று வாரியப்பணிகளில் இருந்து நீங்கள் முழுமையாக விடுபட்டிருக்கிறீர்கள்
வாரியம் மலர்ந்த முகத்தோடு பணியாற்றும் ஒரு தலைமையை இழந்திருக்கிறது.
எதையும் எளிதாக ஏற்கும் உங்கள் குணமும் எப்போதும் மலர்ந்து காணப்படும் உங்கள் முகமும் உங்களுக்கு இனியும் மகிழ்ச்யையும் மனநிறைவையுமே அளிக்கும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
என்றைக்கும் இனிய . .
பாண்டியன்ஜி ( வில்லவன்கோதை )
( என் முகநூல் சித்திரங்கள் )