வெள்ளி, ஜூன் 05, 2015

இனி இப்படித்தான் !


முகநூல் பக்கங்களை அவ்வப்போது எட்டிப்பாற்பதுண்டு அப்போதெல்லாம் அங்காங்கே பார்க்கின்ற பதிவுகளுக்கு என்னுடைய உணர்வுகளை சுவையோடு வெளிப்படுத்தியும் இருக்கிறேன்..வக்கிரமான மொழியையோ எழுதத்தகாத சொற்களையோ நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. மாறாக எதிர்வினையும் பலமுறை ஆற்றியிருக்கிறேன்.இதையெல்லாம் சீரணிக்க இயலாத சிலர் சேறுவாரி இறைப்பதும் நிகழ்ந்திருக்கிறது.நான் சொல்லுகிற கருத்துகளை சொல்லாத அல்லது அவர்கள் விரும்பாத கருத்துக்களோடு ஒட்டிப்பார்பதுதான் கொடுமை.நகைச்சுவையாக சொன்னாலும் இது நகைச்சுவை என்று இன்று சொல்லவேண்டியிருக்கிறது. நான் நம்பிக்கொண்டிருப்பவை பேசிக்கொண்டிருப்பவை எல்லாமே முடிவானவை என்று நான் கருதுவதில்லை.அவைகள் அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான்..அதற்கான வலுவான எதிர்வினைகள் வேண்டும் அவ்ளவுதான்.
ஒருகாலத்தில் தேனீர்கடைகளில் என் நேரத்தை பெருவாரியாகத் தொலைத்திருக்கிறேன் அங்கே நிகழ்ந்த விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வந்ததில்லை.வெருமனே நேரத்தைதான் விழுங்கிற்று. இன்று முகநூல்ப்பக்கங்களும் கருணையற்று காலத்தை விழுங்குவதாகவே எனக்கு தோன்றுகிறது..
அதற்கு முகநூல் பக்கங்கள் முக்கியமான காரணமன்று..பேசமாட்டேன். .சகல வித்தைகளும் தெரிந்த ஒரு கணனியில் இப்போதெல்லாம் சிலர் சீட்டாடிக்கழிப்பதைப்போல முகநூலை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த நூற்றாண்டில் இணையம் விரித்திருக்கிற வலை வியப்புமிக்கது.. அதன் ஒவ்வொரு பக்கங்கமும் ஒவ்வொரு சுவையை ஊட்டுகிறது. இதில் முகநூல் இன்றைய தலைமுறைக்கு கிடைப்பதற்கறிய ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும்
அதை எப்படி வசமாக்கிக்கொளவது என்ற முயற்சியில் இப்போது நான் இறங்கியிருக்கிறேன்
முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்..
இனி வாரத்தில் ஒரு மணிநேரமாவது முகநூலில் இடம் பெறப்போகிறேன்.
என்னைப்பொருத்தவரை.
முகநூல் என்னை நானே செதுக்கிக்கொள்வற்கான இன்னொரு தளம் என்றே கருதுகிறேன்..
என்னை சூழ்ந்து நிகழுகின்ற எதனையும் நண்பர்களோடு முடிந்தவரை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதைத்தவிற வேறொன்றுமில்லை.

வில்லவன்கோதை
5 வெள்ளி ஜூன் 2015


என் முகநூல் சித்திரங்கள்  02