அன்பினிய நண்பர்களே!
வணக்கம். நாம் ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘மனத்தில் நிறைந்த மக்கள்
திலகம்’போட்டியின் முடிவுகளை திருமதி கமலம் சங்கர் வெளியிட்டிருக்கிறார்கள்.
முதல் மூன்று பரிசுகள் என்ற வகையில் மட்டும் தம் முடிவை அறிவிக்காமல், தாம்
பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்ததன் காரணங்களோடு, போட்டியில் பங்கு பெற்ற அனைவரின்
கட்டுரைகளையும், ஆழ்ந்து வாசித்து, அதற்கான தம் கருத்துகளையும் அழகாக
வெளியிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு படைப்பாளியின் மன நிலையை உணர்ந்து
அவர்தம் முடிவுகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறார். அவருக்கும், போட்டியை நல்ல
முறையில் நடத்துவதற்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள கவிஞர்
திரு காவிரி மைந்தன் மற்றும் திரு சசிகுமார் அவர்களுக்கும் வல்லமை
குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள். நன்றி நண்பர்களே.
இணைந்திருங்கள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் காண்போம்!
போட்டிக்கான படைப்புகள்
அனைத்தையும் இங்கு காணலாம்.
முனைவர் கமலம் சங்கர்
வல்லமை மின்னிதழ் நடத்திய ‘‘மனத்தில்
நிறைந்த மக்கள் திலகம்” தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் வருமாறு:
முதற் பரிசுகள் :
1. சுடர்மதி மலர்வேந்தன்
2. ஞா.கலையரசி
3. ஜியாவுத்தீன்
1. சுடர்மதி மலர்வேந்தன்
2. ஞா.கலையரசி
3. ஜியாவுத்தீன்
இரண்டாம் பரிசுகள்:
1. வில்லவன் கோதை ( பாண்டியன்ஜி )
சிறப்புக் குறிப்பு:
எட்டு வயதில்
மலைக்களன பார்த்த அனுபவத்துடன் – ‘அன்று என் மனத்தைக் கவர்ந்துபோன அந்தக் கள்ளன்
கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை என.. அழகான வெளிப்பாடு!
தமிழகத்தின்
வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப் பிம்பம் ஆழப்
பதிகிறது. வாடிய முகத்தைக் கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தைப்
போக்குகின்றவராகவும் எம்.ஜி.யார் வாழ்ந்தார்! என்பன போல் பல சத்தான வரிகள்
சுமந்தபடி, தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவர் பேசப்படுவதான முத்துப் போன்ற
முடிவுடன் அமையும் கட்டுரை, எளிய ஆழமான நடைத்தெளிவுடன் மக்கள் திலகத்தை ஓவியமாக்கி
இரண்டாம் இடத்தில்!
vallamai web tamil mag
vallamai web tamil mag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !