வெள்ளி, ஜனவரி 03, 2020

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்.


வணக்கம் !
இனிய நண்பர்களே ! அமாசான் அறிவித்திருந்த pen to publish 2019 போட்டிக்கான இறுதி நாள் முடிந்திருக்கிறது. அமாசான் தர எந்திரம்  சுழன்று  பொறுக்கி எடுக்கும் மின்நூல்களை இனி இரண்டு எழுத்துலக வல்லுநர்கள் ஆய்வு செய்யப்போகிறார்கள்.இந்தப்போட்டியில் வென்று விடக்கூடுமென்ற பெரும் நம்பிக்கையெல்லாம் என்னிடத்தில் இல்லை.இருந்தாலும் நான் உட்படுத்திய மூன்று புத்தகங்களுக்குமே மதிக்கத்தக்க இடங்களை  நீங்கள் தந்திருப்பது எனக்கு மகிழ்வே. கடந்த இரண்டு மாதங்களில் ஏறதாழ முன்னூற்றுக்கு மேற்பட்ட படிகள் தரவிறக்கப் பட்டிருக்கின்றன..இருந்தாலும் அதற்கான கருத்துரைகள்தான் கிட்டவில்லை.அபரிதமான கருத்துரைகளின் அளவைக் கட்டுப்படுத்த அமாசான் பெரும் கட்டுபாடுகளை விதித்திருப்பது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் கருத்துரைகளை கையாளுவதில் இருக்கும் சிரமம்.இன்னும் ,என் நண்பர்கள் பலருக்கு இலவசப்பிரதியை தரவிறக்குவதில் கூட பெருங் குழப்பம்.
பரவாயில்லை
மேற்சொன்ன வாய்ப்பை நழுவ  விட்டவர்களுக்கு அமாசான் நிறுவனம் கவுண்டவுன் டீல் என்று வருகிற 17 ஜனவரி 2020 லிருந்து சில நாட்களுக்கு அறிவித்திருக்கிறது. அப்போது மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன் நூலுக்கான விலை ரூபாய் பத்தொன்பது  என்று அறிவித்திருக்கிறது.
இணைய நண்பர்கள்
வேர்கள் வலைதள நண்பர்கள்.
முக நூல் நண்பர்கள்
அத்தனை பேரும் ஒரு படி தரவிறக்க வேண்டுகிறேன். கருத்துரைக்கான அமாசானின் கெடு ஏற்கனவே முடிவடைந்து விட்டாலும் நீங்கள் கருத்துரை இட்டால் நான் மகிழ்வேன். இன்றைய சூழலில் ஒரு புத்தகத்துக்கு நீங்கள் கொடுக்கும் பத்தொன்பது ரூபாய் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. முடிந்தவரையில் புத்தகத்தை வாங்கி மறைமலைநகர் ரயில் நிலையம் புத்தகத்துக்கான இடத்தை நீங்களே நிர்ணயிங்கள்.
நன்றி மீண்டும் வருவேன்.
வில்லவன் கோதை
9884127328
02 ஜனவரி 2020  கீழே காணும் முகவரியை க்ளிக் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !