ஞாயிறு, மார்ச் 04, 2012

காவல் கோட்டம் குத்து.!...வெட்டு.! ( இரண்டு )

மார்க்சீய தொண்டருக்கு கிடைத்த விருது !

வில்லவன் கோதை

 இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டுக்கான இந்திய அரசின் சாகித்யஅகாதமி விருது தமிழில் எழுத்தாளர்திரு.சு வெங்கடேசனுக்கு அறிவிக்கபட்டபோது நான் வெங்கடேசனையோ அவருடைய எழுத்துக்களையோ அறிந்திருக்கவில்லை.இடையில் என் வாசிப்புலகில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய இடைவெளியே இதற்கான தலையாய காரணமாக இருக்கக்கூடும். அந்த இடைவெளியில்  படைப்புலகை விட்டு என் பார்வை நகர்ந்திருந்தாலும் அவ்வப்போது  மொழிசார்ந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்பெற்று படைப்பாளிகள் கொண்டாடப்படும்போது வியப்போடும் மகிழ்வோடும் பார்த்தே வந்திருக்கிறேன்.

இந்த உயரிய விருதைப் பெற்றிருக்கிற தோழர் திரு.சு.வெங்கடேசன்  வழக்கமாக இந்த விருதுகளுக்கு உரிமைகொண்டாடுகிற கூட்டத்தைச்சார்ந்தவரல்ல என்பது இன்னொரு சுவாரஸ்யம் . மாற்று சிந்தனை பெற்றவர்களது ஆக்கங்கள் எப்போதும் ஆளும் அதிகார வர்கத்தினரால் என்றும் கண்டு கொள்ப்பட்டதேயில்லை..அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தாத படைப்பாளிகளும் கலைஞர்களும் மட்டுமே இந்த விருதுகளுக்கு சொந்தம் கொண்டாடியதை கண்டிருக்கிறேன். இந்த விருது தங்கள் எல்லையைத்தாண்டி போனதனாலோ என்னவோ தமிழ் படைப்புலகம்   வெகுநாட்கள்வரை இதுபற்றி எதுவுமே பேசாமல்  எதுவுமே எழுதாமல் சலனமற்று இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் மயான அமைதியைக்கலைத்து இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறது. நவீன எழுத்துலகின் அடையாளங்களாக பேசப்படும் எஸ் . ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் இப்போது இருவேறு மாறுபட்ட கருத்துக்களை நீண்ட கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.காவல் கோட்டம் ஆயிரம் பக்க அபத்தம் என்கிறார் எஸ் ராமகிருஷ்ணன். காவல் கோட்டத்தை  ஒதுக்கமுடியாத ஒரு நல்ல நாவல் என்று ஜெயமோகன் எழுதுகிறார். இத்தனைக்கும் வெங்கடேசன் வியந்து போற்றும் மார்க்சீய கருத்துகளுக்கு மாறனவர் ஜெயமோகன் என்பதும் ஜெயமோகனின் இந்துத்வா எழுத்துக்களுக்கு எதிரான குரல் எழுப்பிவந்தவர் வெங்கடேசன் என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல.வெங்கடேசனின் நெருங்கிய சகாக்கள் இந்த கவுரவத்தை கூத்தாடிக்கொண்டாடுவதற்கு மாறாக காவல்கோட்டத்தை முற்றுகையிட்டிருப்பது மேலும் ஒரு வியப்பு.
பொதுவாக இயல்பான மன ஓட்டங்களை பரவலாக வெளிப்படுத்தாத படைப்பாளிகளது ஆக்கங்களுக்கு தடையேதும் இருக்கமுடியாது ..அரசியல் மதம் சார்ந்த கோட்பாடுகளில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்களுக்கும் படைப்புலகில் சிக்கல் எதுவும் இருந்திட முடியாது.தான் சார்ந்த கொள்கைகளில் அனுதாபிகளாக இருப்போரும் அழுத்தமற்றவர்களாக வாழ்வோரும் படைப்புலகில் நுழையும்போது நுழைவாயிலே இடிக்கக்கூடிய நிலை ஏற்படுவதுண்டு. தன்மனதில் இருத்திக்கொண்ட கோட்பாடுகளுக்கு மாறாக எழுத வேண்டிய சூழல்கள் தோன்றக்கூடும். 
இவையத்தனையும் இயல்பான நிகழ்வென்று நான் கருதவில்லை. எத்தனையோ வித்தகர்கள் உதறப்பெற்று ஒரு தலையணையை தயாரித்த அதுவும் இந்த இளம்பருவத்திலா..என்ற கோணங்களில் காவல்கோட்டம் மீது கணைகள் தொடுக்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி ஆண்டுக்கு ஆண்டு எடுக்கும் முடிவுகள்கூட பாரபட்சமாகவும் பாராட்டுக்குறியதாகவும் இருந்தே வந்திருக்கிறது..படைப்பாளிகளின் பார்வையும் பேச்சும் இழந்தபோதே விருது வழங்கி பழக்கப்பட்ட அகாதமி இந்த முறை ஒரேயொரு நாவலை எழுதிய நாற்பது வயது நிரம்பப் பெறாத மார்க்சீய தொண்டருக்கு வழங்கி சிறப்பித்திருக்கிறது. முப்பத்தியெட்டு வயதில் ஜெயகாந்தன் இந்த கவுரவத்தை பெற்றபோது ஒரு அசாத்தியமான மனிதருக்கு கிடைத்திருப்பதாகவே எண்ணி பாராட்டினோம். அவருடைய மகத்தான புத்தகங்களுக்கு கிடைத்திடாத விருது ஒரு சாதாரண புத்தகத்துக்கு கிடைத்தபோது அவருடைய ஆளுமையை மெச்சி சிறப்பித்ததாகவே பேசினோம்.
 நவீனயுகத்தின் தேவைகளையும் அபரிதமான ஆசைகளையும் நிரப்பிக்கொண்டிருக்கிற மனிதர்களைக்கொண்ட ஜனநாயக கட்டமைப்பில் நிகழ்பவை அனைத்தும் ஞாயமும் நேர்மையும் நிறைந்தவையாகவே இருக்கும் என்பதற்கில்லை.அதே சமயம் நிகழ்பவை அனைத்தும் மாறானவை என்றும் கருதிவிட முடியாது. இதற்கு ஒருவாறு நமது நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் ஒரு சில நேரங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகு முறைகளையும் நினைவிற் கொள்ளலாம்.
சாகித்ய அகாதமியின் இந்த விருது ஒரு படைப்பாளியின் கடந்தகால ஆக்கங்களை மனதில் நிறுத்தி வழங்கப்படுவதல்ல என்பதை புரிந்து கொண்டால் இதுபோன்ற கூச்சலை ஓரளவு தவிற்கலாம்.
இருந்தாலும் சாகித்ய அகாதமி இந்த தேர்விற்கான காரணங்களை சற்று வெளிப்படையாக வைக்கலாம்..அப்போதும் இந்த கூச்சல்கள்  குறையுமென்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை வேறு வேறு ராகங்களில்  இசைக்கப்படலாம்.

இது போன்ற காரணங்களை எழுப்பி அகாதமியை சிறுமைப் படுத்துவதைவிட படைப்பாளிகளின் படைப்புகளை ஆழ்ந்து விமரிசிப்பதே மொழிக்கு பெருமை சேர்க்கும் என்பதை உணரவேண்டும்.
59 ,60 களில் சிறப்பாக பேசப்பட்ட பெருவாரியான சரித்திர புதினங்களை விருப்போடு படித்தவன் நான். ஒரு சரித்திர நாவலின் வடிவம் இப்படித்தான் இருக்குமென்ற நினைவு இன்றும் இருக்கிறது. இருந்தபோதிலும் காவல் கோட்டம் அந்த வரையரைக்குள் அடங்கவேண்டும் என்று நான் கருதவில்லை.அளவான இசைக்கருவிகளுடன் ஒரு நல்ல இசைக் கச்சேரி எப்படி இயல்பாக நிகழ்கிறதோ அதுபோல் இந்த ஆயிரம் பக்க புதினம் இருந்திட வேண்டும்.கச்சேரி எத்தனை மணி நேரம் நீளுகிறது என்ற பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன்.
தோழர் வெங்கடேசனின் காவல் கோட்டம் இருக்குமா...
காவல் கோட்டம் மூன்றில் பார்க்கலாம்...
( வேர்கள் பதிவு 0085 ன் தொடர்ச்சி.)
இடுகை 0087

3 கருத்துகள்:

  1. padichittu appuram itha eluthi iruntha nalla irunthirukkum.. Muthalla padinga.. apuram pesunga

    பதிலளிநீக்கு
  2. அடையாளமற்ற நண்பருக்கு
    உங்கள் பார்வையும் மறுமொழியும் மகிழ்வைத்தருகிறது.காவல்கோட்டம் புத்தகத்துக்கு வெளியே பேசுவதற்கு சுவரஸ்யம் நிறைந்த செய்திகள் நிரம்ப இருக்கிறது.இதற்கே சலிப்புற்றால் எப்படி...
    பல்லவியை பாருங்கள்!
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  3. http://nirmalcb.blogspot.com/2012/03/6.html
    ஒரு சாதரன வாசகனின் பதிவு,

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !