ஞாயிறு, ஜூலை 01, 2012

175000 கோடிகள்


அடையாளமற்றவரின் அங்கலாய்ப்பு !
மஸ்டர் ரோலில் துவங்கி,பால் கமிஷன்,அறிவியல் பூர்வமான ஊழல் முறைகளை தமிழகத்திற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது முதல் கடைசியில் வரலாறு காணாத(!?) 175000 கோடிகள் வரையான ஊழல்களையும் பட்டியலில் சேருங்கள

 ---   கலைஞரும் அவர் கிழித்ததும் பதிவுக்கு வந்த ஒரு பெயரற்றவரின் மறு மொழி!

அன்பார்ந்த பெயரற்றவற்கு
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. திராவிட இயக்கத்தில் ஏற்பட்டுவிட்ட கடந்த கால களங்கங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன்.
நீங்கள் குறிப்படவைகளையும் இந்த பட்டியலில் இணைக்க ஆசைப்பட்டிருக்கிறீர்கள். .திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதும் போது இவைகளை சேர்ப்பதே சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.இவைகளப்பற்றிய விளக்கங்களை கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சரிதையில்கூட இடம் பெற்றிருப்பதை காணலாம்.இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் ஏற்படுத்த நினைத்த மாற்றங்களை நிஜமாக்கிய ஒரே தலைவர் கலைஞர்.அவரும் சாதாரண மனிதர்தாம். மகாத்மா அல்ல.இந்த 89 வயது நிரம்பிய கலைஞர் ஏரத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இடம் பெற்று ஆற்றிய பணிகளைத்தான தொல்காப்பியன்  சாதனைகளாக தொகுத்தளித்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் மஸ்தூர் ரோல் ஊழல் வெளிப்பட்டதுமே நிர்வாகத்தை கலைத்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது கலைஞர்தான்.
அடுத்தடுத்து ஆளுகின்ற வர்கம் காழ்ப்புணர்ச்சியோடு அமைத்த அத்தனை கமிஷன்களின் செயல்பாடுகள் இந்த தேசம் அறியாத்தல்ல.குற்றங்களை நிரூபிக்க வக்ற்ற கமிஷன்கள் சொல்லிச் சென்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு எத்தனை காலம்தான்  ஏமாற்றப் போகிறீர்கள்.
இந்த தேசம் இன்றும் நம்பிக்கொண்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமே.என்று நினைக்கிறேன். அவற்றுக்கு தலைவணங்குவது ஒன்றுதான் நமக்கிருக்கும் ஒரே வழி.
தவறுகளும் குற்றங்களும் தாராளமாக செய்யக்கூடிய மனிதர்களின் கட்டமைப்பை கொண்ட இந்திய ஜனநாயகத்தில் ஊழலற்ற இயக்கமொன்றை ஒன்று சொல்லுங்கள்.
தேசத்துக்கு விடுதலையை பெற்றுத்தந்த காங்கிரஸ் பேரியக்கமே இன்று ஊழலில் சிக்கித் திணற வில்லையா. காங்கிரசுக்கு மாற்றாக முளைத்த பல்வேறு இயக்கங்கள் நிலை என்ன.
ஊழலும் அத்து மீறலும் விஞ்சி கிடப்பது தமிழ் மண்ணில் திமுகாவில் மட்டும்தான் என்று கருதுகிறீர்களா.ஊழலும் ஊழலின் அளவும்.இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கும் கலாச்சார நாற்றத்தின் விளைவு என்பதை உணருங்கள். ஊழல் ஊழல் என்று  சொல்லிச்சொல்லி இந்த மண்ணுக்கு அரணாக நிற்கும் வேர்களுக்கு விஷம் பாச்ச வேண்டாம். பட்டுப் போன பக்கங்களை வெட்டியெறிந்து  இந்த மண்ணிற்கு தேவையான வேர்களை காக்க உதவுங்கள்..
சுய லாபங்களை அறியாவர்கள் அத்தனை பேரும் ஊழலுக்கும் ஒழுங்கீனத்துக்கும் எதிரானவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
திருடன் திருடன் என்று குரலெழுப்பி இன்று திருடிக்கொண்டு ஓடுகிறவனை காக்க முயலாகாதீர்கள்.
வில்லவன் கோதை
இடுகை 0091