தூள் பக்கோடா
ஒருமுறை ஒரிசா மாநில
அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது.
“பெண்கள்
அரசாங்க உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாம், போலீஸ்
உத்தியோகம் தவிர”
இந்த விளம்பரத்தை கண்ணுற்ற தந்தை பெரியார் …
போலீசை
பார்த்தால் குற்றவாளி அச்சப்படுவது அவன் ஆண் என்பதால் அல்ல, துப்பாக்கி அவனிடம்
இருப்பதால்தான்.
துப்பாக்கியை
பெண் கிட்ட குடு …
என்று குடியரசில் எழுதினார். கொண்டை போட்டுக்கொண்டிருந்த ஆண்கள், வசதியாக கிராப்பு
வெட்டிக்கொண்டனர். பெண்களும் கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றும், குப்பாயம் போடுங்க என்றும் – தாலி சடங்குகளற்ற
திருமணம் என புதுமையான காரியங்களை அன்றே பெரியார் பேசினார்.
பெரியாரின்
பெண்ணியம் நிலவுபோன்று வளர்ந்ததல்ல … அது முழுமையாக உடனே தோன்றிய சூரியன்
- அருணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !