சனி, அக்டோபர் 26, 2013

தமிழவேள் கோ சாரங்கபாணி




வில்லவன் கோதை


 ஜே மு  சாலியின் நூலொன்றை இலக்கியவீதி வெளியிடுகிறதென்ற இனிய தகவலை இனியவனின் புதல்வி திருமதி வாசுகி பத்ரி அனுப்பியபோது என்னைதாண்டிய மகிழ்வொன்று என்னிடம் ஏற்பட்டது.
ஐம்பதுகளில் கலைமகள் காரியாலயத்தின் கண்ணன் இதழ் படிக்கின்ற மாணவர்களிடையே பத்திரிக்கையில் எழுதுகின்ற ஆர்வத்தை விதைத்து .அடுத்த தலைமுறையின்  அடையாளங்களை அன்றே கண்ணன் இதழ் விளக்கிட்டு காட்டியது. அன்றுவிதைக்கப்பட்ட எத்தனையோ விதைகள் இன்னமும் முழுவீச்சுடன்  கிளைத்து நிற்பதைக்காணலாம்.
ஐம்பதுகளில் இலக்கியவீதி இனியவனும் ஜெ மு சாலியும் அப்படி அடையாளம் காட்டப்பட்டவர்கள்தாம்.
சென்னைப்புறநகரில் வசித்தாலும் போக்குவரத்து சிக்கல்களை ஒதுக்கி விழாவில் நானும் கலந்துகொண்டேன்.
நேற்று மாலை 06 00 மணியளவில் ( 25 10 2013 ) சென்னை திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் நினைவு அரங்கில் விழா நிகழ்வுகள் தொடங்கின. இலக்கிய வீதியின் கூட்டம் வெகு நாட்களுக்குப்பிறகு நிகழ்வதாக சொன்னார்கள்.  எனக்கு இதுதான் முதற்கூட்டம்.  
சமீப காலமாக உடல் நலிவுற்றிருந்தபோதும் சக நண்பரின் விழாவைக்கருதி  இனியவன்  நண்பரின்  பொற்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு வரவேற்புரையாற்றினார்
செந்தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தமிழவேள் கோ. சரங்கபாணி நூலை வெளியிட கவிஞர் மு மேத்தா முதற்படியை பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூருக்கு பிழைக்கப்போன திருவாரூர் கோ சாரங்கபாணி தந்தை பெரியாரின் அடியொற்றி எப்படி தமிழர்தம் வாழ்வில் ஒளியேற்றினார்.
பிழைக்கப்போன பிரதேசத்தில் மாறுபட்ட மனிதர்களிடையே தமிழ்முரசு இதழை நிலை நிறுத்தி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் எப்படி தமிழர் தந்தையானார்
என்ற விபரங்களை சிலம்பொலியார் மாறுபட்ட கோணங்களில் தொட்டுக்காட்டினார். அதேசமயம் மதுவும் அன்னிய மொழிமோகமும் இந்த மண்ணை எப்படி சீரழிக்கிறது என்ற வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் உரையாற்றிய பொற்றாமரை பொறுப்பாளரும் அரசியல்வாதியுமான இல கணேசனும் கவிஞர் மு மேத்தாவும்  கோ சாரங்கபாணியின் எழுச்சியை எடுத்துக்காட்டினர்.
சாலியின் சமகால நண்பர் எழுத்தாளர் சாருகேசியும் சக பத்திரிக்கையாளர் தினமணி பா கிருஷ்ணனும் சாலி எத்தனை வித்தியாசமான மனிதர் என்பதை கோடிட்டு காட்டினர். விழா நன்றியுரையுடன் இனிது முடிந்தது .                                                       
நிகழ்வை தொகுத்தளித்த திருமதி வாசுகி பத்ரியின் தொகுப்புரை மெச்சத்தகுந்தது.                                                                                                                                                                      ------------------------------------------------
சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ சரங்கபாணி நூலின் என் பார்வை அடுத்த பதிவுகளில் இடம் பெறும்.
இடுகை 106


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !