ஞாயிறு, டிசம்பர் 28, 2014

இயக்குநர் விஜய்க்கு அம்மா சொன்ன கதை !

வணக்கம்  !

கடந்த இருபத்தைந்தாம் தேதி மாலை நண்பர் ஜகநாதன் கைபேசியில் அழைத்தார்.
'' சைவம் திரைப்படம் பாத்தீங்களா..? ''
'' இல்லியே ! ''
'' அதன் கடைசி காட்சிகளை கொஞ்சம் பாருங்கள். உங்கள் உயிர்வதை சிறுகதையை நினைவூட்டுவதாக தோன்றுகிறது.''
கைபேசியைத் துண்டித்தார் ஜெகநாதன். அன்றுதான்  ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் கிருஸ்த்மஸ்சிறப்பு நிகழ்ச்சியாக அந்தப் படத்தை ஒளிபரப்பிருக்கிறார்கள். நண்பர் ஜகநாதனின் அழைப்பைத்தொடர்ந்து வேறு சில நண்பர்களும் இதே தகவல்களை. பகிர்ந்து கொண்டார்கள் புறச்சூழல்களால் அந்தத்திரைப்படத்தை நான் பார்க்க முடியவில்லை.
29 ஜூலை 2012 கல்கி இதழில்  நான் எழுதிய உயிர்வதை என்ற சிறுகதை பிரசுரமாயிற்று.
நெடுங்காலமாக விடுபட்டுப்போன நேர்த்திக்கடன் ஒன்றை  நிறைவேற்ற   குலதெய்வக்கோயில் ஒன்றில் கூடுகிறது. ஒரு நடுத்தர வர்க குடும்பம்.  குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு காது குத்துகிறார்கள்.. கிடா வெட்டுவதாக ஏற்பாடு.
இயல்பாகவே செல்லப்பிராணிகள் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிறுமி அனு தான் புதிதாக நேசிக்கத்தொடங்கிய குட்டிஆட்டை கூறு போடப்போகிறார்கள் என்றறிந்தபோது திடுக்கிடுகிறாள். .அவளுடைய அடங்காத  அழுகையும் பிடிவாதமும் அந்த ஆட்டை அப்போதைக்கு காக்கிறது.
உயிர்வதை சிறுகதையின் மையக்கருத்து இதுதான்.
இதர்க்கான எண்ணம் என் நினைவுகளில் வெகுநாட்களாக ஊறிக்கிடந்த ஒன்று. என்றைக்குமே மனித குலம் புலால் உண்பதையும் இறைச்சியை விழுங்குவதையும் விட்டு விடப்போவதில்லை என்பதை மிக நன்றாக உணர்ந்தவன் நான். இருந்தபோதிலும் அன்பிற்கு அடையாளமாக சொல்லப்படுகிற ஆலயங்களில் ஒரு உயிரை இன்னொரு உயிர் வதைக்க வேண்டுமா எனபதுதான் மையக்கருத்து.
ஆடுகளையோ கோழிகளையோ வெட்டும்போது காண நேர்ந்தவர்கள் அன்றைக்கு உணவையே மறந்ததை பார்த்திருக்கிறேன். அருள் மிகுந்த சன்னிதானத்தில் சந்தோஷமான தருணங்களில் இந்த பலி ஏன். 
இந்த எண்ணங்களின் வெளிப்பாடே என்னுடைய உயிர்வதை. இதர்க்கான முடிவுகளை நான் இந்த கதையில் பேசவில்லை. வாசகர் கருத்துக்கே விட்டிருந்தேன்.
இந்த சிறுகதைக்கும்  இயக்குநர் விஜைக்கு அவர் அம்மா சொன்னதாக சொல்லப்படும்  சைவம் திரைக்கதைக்கும் ஒற்றுமை ஏதேனும் இருந்திருக்கக் கூடும். இந்த மையக்கருத்து எவருக்கும் தோன்றாததாகவோ தோன்றக்கூடாத்தாகவோ நான் நினைக்கவில்லை. இணைய வாசகர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.
எனது பத்து பதினைந்து சிறுகதைகள் கொண்ட உயிர் வதை கதைத்தொகுப்பு வருகிற புத்தாண்டில் விற்பனைக்கு கிடைக்கும். தவறாமல் வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இனிய. . .

பாண்டியன்ஜி ( வில்லவன் கோதை ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !