பாண்டியன்ஜி___________________________
வழக்கம் போலவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே துவங்கிய சென்னை 35 வது புத்தக்கண்காட்சி கடந்த ஒரு வரத்துக்கு மேலாக பரபரப்பாக நடந்துவருகிறது. ஏறதாழ 500 க்கு மேற்பட்ட பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்திருந்தன. இந்த புத்தக சந்தை வருகிற 17 ஆம் தேதி முடிவுக்குவர இருக்கிறது.
சென்னை புறநகர் பகுதியில் வாழும் எனக்கு கடந்த சனிக்கிழமை மாலைதான் ( 14 01 2012 ) இந்த சந்தையை சுற்றிக்காண வாய்ப்பு கிடைத்த்து. அடுத்த நாள் பொங்கற்பண்டிகையின் விடுமுறை துவங்குவதால் வீடு திரும்புவதில் இருக்கும் சிறமத்தையும் உணர்ந்திருந்தேன்.
புத்தகத்திருவிழாவில் குழந்தைகள் இளைஞர்கள் வயது முதிர்ந்தோர் என்று மிகுதியான ஜனத்திறளை காணமுடிந்தது. கடந்த வருடங்களை விஞ்சும் அளவுக்கு விதம்விதமான வாகனங்களும் நிரம்பி வழிந்தன. நீண்ட நுழைவாயிலின் இருபுரமும் வண்ண வண்ண கட் அவுட்கள் படைப்பாளிகளின் உருவங்களைத்தாங்கி எழுந்து கம்பீரமாக நின்றன. .நுழைவாயிலின் கிழக்குதிசை ஓரங்களில் குளிர்பான கடைகளும் நவீன சிற்றுண்டிகளுக்கான அங்காடிகளும் வரிசையில் நின்றன. அரங்குக்கு வெளியே உருவெடுத்திருந்த பிரமாண்டமான அரங்கில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு ஒவ்வொரு நாளும் தவறாது செவிக்கு உணவு வழங்கி வந்தார்கள்.செவி உணவில் சலிப்பு தட்டும்போது வயிற்றுக்கு ஈய மேடைக்கு அருகே தரமான சிற்றுண்டி ஒன்றும் தயாராயிருந்த்து.. அத்தனை இடங்களிலும் ஜனத்திரள் நிரம்பி வழிந்ததை பார்த்தேன்.
புத்தகச்சந்தையை நான் நெருங்கியபோது விழா அரங்கில் மணிமேகலை பிரசுரத்தின் 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் திரு லேனா தமிழ்வாணனை சிறப்பிக்கும் நிகழ்வும் நடந்துகொண்டிருந்தது..தமிழறிஞர் திரு அவ்வை நடராசன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த விழாவில் பத்திரிக்கையாளர் மாலன் திரையுலகைச் சார்ந்த டி. ராஜேந்தர் இயக்குநர் எஸ் பி முத்துராமன் மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் கலந்துகொண்டு புதிய புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தினர்.இந்த நிகழ்வுகளில் என் நணபர் திரு ரிஷிவனின் ஒரு குறுங்கவிதை புத்தகமும் வெளியிடப்பட்டதுபத்திரிக்கையாளர் மாலன் லேனாவின் அபூர்வமான குணங்களை அள்ளிவைத்துக்கொண்டிருந்தார்..
திரு லேனா தமிழ்வாணனின் உயர்ந்த குணங்களையும் அவரது தந்தை தமிழ்வாணனின் சிறப்பியல்புகளையும் திரு மாலன் பேசக்கேட்டேன்.ஒரு மகிழ்வான குடும்பத்துக்கு எடுத்துக்காட்டாக திரு லேனா குடும்பம் எப்படி திகழ்கிறது என்பதை இயக்குநர் எஸ் பி முத்துராமன் சுட்டிக்காட்டியது சிறப்பானது.
அய்ம்பதுகளிலேயே லேனாவின் தந்தை திரு தமிழ்வாணனை கல்கண்டு ஆசிரியனாக நான் அறிவேன். அளவிற்கதிகமான தன்னம்பிக்கையும் பத்திரிக்கையாளனுக்கு தேவையான மிகுந்த துணிவும் நிரம்பப் பெற்றவர்.அணில் என்ற குழந்தை இதழின் ஆசிரியனாக அறிமுகமான தமிழ்வாணன் பின்னாளில் குமுதம் குழுமத்தின் கல்கண்டுக்கு ஆசிரியர் ஆனார்..வாரம் ஒருமுறை குமுதம் இதழோடு வெளிவரும் கல்கண்டு இதழை தன்னுடைய எழுத்துக்களை கொண்டே நிரப்பியவர்.துப்பரறியும் தொடரையும் புலனாய்வு சுவையை ஆரம்பகாலத்தில் வாசகர்களுக்கு ஊட்டியவர் தமிழ்வாணன்தான். தன்னுடைய கதைகள் அனைத்தையும் தனித்தமிழில் பிறமொழிக்கலப்பின்றி வாசிக்கத்தகுந்த இனிய தமிழில் எழுதியவர். முதன் முதலாகஅவர் கையாண்ட புதிய தமிழ்சொற்கள் இன்றும் வழக்கில் இருப்பதை பார்க்கலாம்.அவர் கண்டறிந்த பல்வேறு புதிய தமிழ்சொற்களை இன்றும் எனது எழுத்துக்களில் கையாண்டு வருகிறேன்.காலத்துக்கும் நேரத்துக்கும் அவர் அளித்த மக்கியத்துவம் இரண்டாம் தலைமுறையான லேனாவிடமும் என்னால் காணமுடிகிறதுஅவர் எழுத்துலகில் நுழையாத எந்த துறைகளும் இருந்த்தாக நினைவில்லை. மிகுந்த கர்வத்தோடு mster of all subjects என்று தன்னை அழைத்துக்கொண்டவர்.தனக்குத்தானே வெவ்வேறு சிறப்பு பட்டங்களை துணிவுடன் சூட்டிக்கொண்டவர்.நடிகர் எம்ஜி.ராமச்சந்திரனுக்கு மக்கள் திலகம் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தவர் அவரே. அய்ம்பதுகளில் எழுத்துலகில் நுழைந்த எவரும் தமிழ்வாணனை தாண்டி பிரவேசித்திருக்கமுடியாது என்பதுதான் உண்மை.
அவர் மறைந்தபோது அவருடைய கல்கண்டு இதழும் மறைந்திருக்க வேண்டும்.ஆனால் அந்த வெற்றிடம் அன்று மாணவராயிருந்த அவருடைய மகன் லேனாவால் நிரப்பப்பட்டது எவரும் எதிர்பாராத ஒன்று..அன்றைய தமிழ்வாணன் இன்று இருந்தால் எப்படி வாழந்திருக்கக் கூடும் என்பதை திரு லேனாவிடம் முழுமையாக என்னால் காணமுடிகிறது. லேனாவின் குடும்பம் ஒரு நல்ல குடும்பத்துக்கு எடுத்துக்காட்டாக எப்படி திகழ்கிறது என்பதை அவருடைய சகோதர்ர் திரு ரவிதமிழ்வாணனின் இணைப்புரையின் மூலம் உணரமுடிந்த்து.விழா நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
பழம் சிந்தனைகளில் சிக்கிப்போயிருந்த எனக்கு புத்தக அரங்குகளை சுற்றிவர போதுமான நேரம் இல்லாமற் போயிற்று.
இங்கே கொட்டிக்குவிக்கப்பட்டிருந்த எந்த புத்தகமும் சென்னை நகரில் கிடைக்காத ஒன்றல்ல. இருந்தபோதும் அத்தனையும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருப்பதை பார்க்குபோது ...அந்த அனுபவம் வாசிப்புணர்வு உள்ளவர்கள் மட்டுமே உணரக்கூடியது.அந்த புத்தகங்களின் நேர்த்தியான வடிவமைப்பு ...விண்ணென்று வியாபிக்கும் ஒருவித மணம்..ஓ..அது வித்தியாசமான அனுபவம்.
பெரும்பாலும் அடையாளம் அறிந்த எழுத்தாளர்களின் புத்தகங்களே கைமாறியதை பார்த்தேன்.அய்ம்பது அறுபதுகளில் அடையாளம் காணப்பட்டவர்களின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் மறுபிறவி பெற்றிருப்பதை காணமுடிந்த்து.
பெரும்பாலும் அடையாளம் அறிந்த எழுத்தாளர்களின் புத்தகங்களே கைமாறியதை பார்த்தேன்.அய்ம்பது அறுபதுகளில் அடையாளம் காணப்பட்டவர்களின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் மறுபிறவி பெற்றிருப்பதை காணமுடிந்த்து.
பல்வேறு பதிப்பக அரங்குகளில் ஒருசில படைப்பாளிகளையும் காணமுடிந்த்து. என்னுடைய நகர்வில் எழுத்தாளர் பாலகுமாரனையும் உயிர்மை மனுஷ்யபுத்திரனையும் கண்டு பேசமுடிந்த்து.
இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் விருது பெற்ற கம்யூனிசமுழுநேர பிரதிநிதி திரு சு வெங்கடேசனையும் பார்த்தேன். நாற்பது வயது நிரம்பிய ஒரு இளைஞரின் உழைப்பிற்கு இந்த உயரிய விருது கிடைத்திருப்பது தமிழர்கள் பெரிமிதமும் பூரிப்பும் கொள்ளத்தக்கது.
பொதுவாக சாகித்ய அகாதமி வழங்கும் விருதுகள் படைப்பாளிகள் வாழ்நாளில் சாதித்தவைக்கானவை அல்ல என்றே சொல்லவேண்டும்.குறிப்பிட்ட ஆண்டுகளில் தங்கள் முன் வைக்கப்பட்ட நூல்களில் தரமானதென்று கருதப்படுவனவைக்கே விருது வழங்கப்படுகிறது.ஒரே புதினத்தை மட்டுமே படைத்து வெங்கடேசன் பெற்ற விருது இதனையே குறிக்கிறது.
இந்த வரலாற்று புதினத்தை வடித்த சு வெங்கடேசன் இரண்டொரு கவிதைத் தொகுப்புக்களை மட்டுமே எழுதியவர்.
ஏறத்தாழ 1000 பக்கங்களுக்கு மேலான அவர் எழுதிய காவல்கோட்டம் நாவலின் தோற்றமே பிரமிக்கத் தக்கதாயிருந்த்து. ஒரு 600 ஆண்டு கால சரித்திரத்தை எழுத அவர் எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகள்.என்று அறியும்போது அவர் பெற்றிருந்த பொறுமை அசாத்தியமானது. அதற்கு அவர் மேற்கொண்ட சிறத்தை போற்றத்தக்கது.இன்று பெரிதாகப்பேசப்படும் முல்லை பெரியாறு குறித்த வரலாறும் இந்தபுதினத்தில் காணப்படுகிறது.
குழந்தைகளை ஈர்க்கும் ஏரளமான அரங்குகள் இடம் பெற்றிருநதன.கணினி சார்ந்த புத்கங்கள் அரங்கு முழுதும் காணப்பட்டது.குருந்தகடுகளும் மென் பொருள்களும்
மலிவு விலைக்கு வந்திருந்தன.ஏராளமான கணினி விளையாட்டுக்கள் கொட்டிக்கிடந்தன.அரைமணி நேரம் சுற்றக்கூடிய குறும் படங்களைக்கொண்ட தட்டுகளும் விற்பனைக்கு கிடைத்தன.
இந்து முஸ்லிம் மதம் சார்ந்த நூல்களைக்கொண்ட பல்வேறு அரங்குகளும் இடம் பிடித்திருந்தன.ஆங்கில மொழிசார்ந்த முன்னணிபதிப்பகங்களும் முக்கிய இடத்தை பெற்றிருந்தன.
முழுமையாக அத்தனை அரங்குகளையும் சுற்றவோ விரும்பிய புத்தகங்களை வாங்குதற்கோ எனக்கு போதுமான அவகாசம் இல்லாமற் போயிற்று.
பேராசைகளை ஓரளவாவது நிறைவு செய்ய சந்தை முடியும் முன் இன்னொருமுறை போகத்தான் வேண்டும்.
இடுகை 0084
Nice, Hope i go there
பதிலளிநீக்குநன்றி பாண்டியன் அவர்களே... என்னுடைய அழைப்பினை ஏற்று, என் கவிதை வெளியீட்டு விழாவுக்கு வந்தமைக்கு,... மேலும், என்னைப்பற்றி எழுதியதற்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குsuper and nice..............
பதிலளிநீக்குஉங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.
பதிலளிநீக்கு