திங்கள், மே 17, 2010

கலைத்துறையை விழுங்கும் ' சுறாக்கள்




கலைத்துறையை விழுங்கும் ' சுறாக்கள் ' -----------------------------
( திரையுலகின் எழுச்சியும் வீழ்ச்சியும் )
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தை காணுகின்ற வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது கோடை விடுமுறையை கொண்டாட வந்த குழந்தைகளின் வர்ப்புருத்தலாலும் திரையிடப்படும் அரங்கு மாறுபட்டு இருந்ததாலும் தயக்கமின்றி கிளம்பினேன். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்வேறு கோடை பொழுது போக்கிடங்களுக்கிடையில் கம்பீரமாக காட்ச்சியளித்த திறந்த வெளித்திரையரங்கில் (prarthana- drive - in thetare ) விஜய் நடித்த சுறா திரைப்படத்தை கண்ணுற்றேன். சமீபத்திய நாட்களில் இணையதள வலைப்பூக்களில் மாறுபட்ட பல்வேறு பார்வையில் சுறா இடம் பிடித்துக் கொண்டிருந்தது
நீண்டு உயர்ந்து காணப்பெற்ற விசுவரூப திரைக்கெதிரே வரிசையாக கார்களை நிறுத்தி காரில் இருந்தவாறே படத்தை காணும்
வசதி செய்திருந்தார்கள். ஒவ்வொரு காரின் இருபுறமும் ஒலியை கேட்பதற்கு வசதியாக தனித்தனியே ஒலிப்பெருக்கி தூண்களை
நிருவியிருந்தார்கள். காரில் வந்த பெரும்பாலோர் சிற்றுண்டியுடன் படுக்கைத் தலையணையோடு வந்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
தமிழக திரை அரங்குகளில் இது ஒரு புதிய முயற்சி என்றே சொல்லவேண்டும்.
பொதுவாக எந்தவொரு செயலும் பார்வையளர்களின் ரசனையை காட்டிலும் சற்று புதுமையாகவும் உயர்வாகவும் இருந்தால் மட்டுமே
சிறப்பாக பேசப்படும். பிறந்த குழந்தைகூட தன் ரசனைக்கு தாழ்வான எதையும் கையை அசைத்து ரசிப்பதில்லை என்பதை கவனிக்கவேண்டும்.கடந்த காலங்களில் நான் திரைப்படங்களைத் தவிர்த்து விலகியிருந்தது எனது திரையுலக ரசனை சற்று உயர்ந்து போனதுதான் என்று கருதுகிறேன்.
தமிழக திரையுலகைப் பொறுத்தவரை 60 , 70 கள்தாம் ஒரு பொற்காலத்தின் துவக்கம் என்று கருதலாம்.
மக்களிடையே மொழியின்பால் ஏற்பட்ட பற்று உயர்ந்து காணப்பட்டது. எழுத்தும் பேச்சும் சாமானிய மக்களின் சிந்தனையை கிளறிய நேரம். இசையின் நாதம் ஓங்கி உயர்ந்து ஒலித்த காலம் .
இன்றைய நாளில் அபரிதமாக வளர்ச்சியுற்றிருக்கும் தொழில்நுட்ப சாதனங்களின் தாக்கம் அன்னாளில் இல்லாமலிருந்தது . தமிழகத்தின் மூலைகளிலிருந்து திரைத்துறை கனவுகளோடு சென்னைக்கு இடம்பெயர்ந்த எண்ணற்ற இளஞர்களின் உள்ளார்ந்த ஈடுபாடு திரை உலகை வெற்றியின் விளிம்புக்கே கொண்டு சென்றது. இன்னும் சொல்லப்போனால் 50 ,60 களில் உண்ண உணவின்றி , தங்க இடமின்றி நகரின் வீதிகளில் வலம் வந்த திரைத்துறை இளஞர்களில் ஒரு சிலர் இன்று தமிழகத்தையே வழிநடத்தும் வாய்ப்பினை பெற்றிருப்பதை மறப்பதற்கில்லை.
காலம் வழக்கம் போல நகர்ந்தது.
உலகெங்கும் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்ச ி வீரிட்டெழுந்தது. தொலைக்காட்ச்சியின் ஆதிக்கம் குக்கிராமங்களிலும் எதிரொலித்தது. தொடர்ந்து நிகழ்ந்த போட்டியில் திரையுலகம் தோல்வியைத் தழுவியது. குறுந்தகடுகளின் ஆதிக்கம் மேலும் திரையுலகை சோர்வடையச் செய்தது. அரசின் அளவற்ற வா ி விதிப்பு , உயர்ந்து போன ஊதிய விகிதங்கள், கடடுக் கடங்காத படப்பிடிப்பு செலவினங்கள் மேலும் திரையுலகை படு பாதாளத்துக்கு கொண்டு சென்றன.
விளைவு -
நகரின் அடையாளங்கள் என்று சொல்லப்பட்ட திரை அரங்குகள் இழுத்து மூடப்பட்டன.
கிராமப்புற அரங்குகள் கல்யாண மண்டபங்களாக உரு மாறின. நகரின் பாரம்பாயமிக்க திரையரங்குகள் ஏறதாழ வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன
மொழியையும் கலையையும் நேசிக்கிற அரசு தமிழகத்தில் நிறுவப்பட்டபோது கேளிக்கை வரிகளைக் குறைத்து ஏராளமான சலுகைகளை அறிவித்தது. இந்த நேரத்தில் திரையுலகில் நுழைந்த புதிய தலைமுறையினர் மொழியன் அடிப்படைக் கூறுகளையே சிதைக்கத் துவங்கினர். திரைவசனம் , பாடல் , மற்றும் படத்தின் தலைப்புக்கள் அனைத்திலும் ஆங்கிலம் மற்றும் தேசிய மொழிகளை திணித்து சித்ரவதைக்குள்ளாக்கினர் . மொத்தத்தில் தமிழ் திரையுலகம் இடம் பெயர்ந்து எங்கோ பயணித்தது. பெற்ற தாயை கண்ணெதிரே சிதைக்கின்ற காட்ச்சியை கையிறு நிலையில் காண நேர்ந்தது.
இத்தகய மாற்றங்களை சற்றும் எதிர்பாராத அரசு மீண்டும் திரையுலகை தூக்கி நிறுத்த முயன்றது.தமிழில் பெயரிடப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு சிறப்புப் பரிசு அறிவித்தது . (வெட்கப்பட வேண்டிய செயல் ) அரசின் அயரா முயற்சியில் திரையுலகம் மீண்டும் உயிர்த்தெழ கண்ணுற்றோம். தமிழ் திரைப்படங்களின் தலைப்புக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றம் பெற்றன.
இருந்த போதிலும் --
தமிழ் திரையுலகம் முழுமையாக வணிகர் கையில் சிக்கியிருப்பதை மறைக்க இயலாது. மக்களின் மனதுக்கு மயக்கம் செலுத்தி மடியில் பணத்தைப் பறிக்கும் செயலே நிகழ்கிறது. கலைப் பாரம்பரியம் மிகுந்தோரின் இன்றைய சந்ததியினரே இந்த இழி செயலுக்கு முன்னிற்கின்றனர் என்பது வேதனை மிகுந்த செய்தி. இன்றைய தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளே சான்று. இருப்பினும் இந்த வணிகக் கூச்சலில் ஒரு சிலர் தங்கள் கற்பனைகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பது சற்று ஆருதலான செய்தி, 60 , 70 களில் தங்கள் சுயவாழ்வினை தொலைத்து விட்டு கலை மீது தீரா வெறி கொண்டவர்களின் கடின உழைப்பே இனறும் 60 , 70 களை திரும்பத் திரும்ப பேசக்கேட்கிறோம்.
--------------------------------------------------
சுறா திரைப்படத்தை பார்த்து திரும்பிக்கொண்டிருக்கிறேன். மணி பதினொன்றை தாண்டியதால் தார்ச்சாலைகள் இடையூரின்றி தெளிவாக தெரிகின்றன. ஆனால் தமிழ்த்திரையுலகம் பயணிக்கும் திசைதான் சரியாக புலப்படவில்லை.

சென்னையிலிருந்து.....
பாண்டியன்ஜி
இடுகை 0014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !