ஞாயிறு, ஜனவரி 15, 2012

வேர்களின் வாழ்த்து !

திருவள்ளுவர் ஆண்டு  2043  --தமிழர் பெருநாள் பொங்கல் !

தை முதன்நாளே தமிழர்தம் ஆண்டின் துவக்கமென அறிவித்து அதற்கென இயக்கங்களை ஏற்படுத்தி தங்கள் வாழ்நாளை பகிர்ந்துகொண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் அத்தனைபேரையும் இப்போது வேர்கள் நினைவு கூருகிறது.

இந்த மண்ணுக்கும் மொழிக்கும் உரிய உரிமைகள் ஒவ்வொன்றையும் போரடிப்போரடித்தான் பெருவது நமக்கெல்லாம் பழக்கமாயிருந்திருக்கிறது.
எந்த உரிமையும் தானே கிடைத்ததாக வரலாறு சொன்னதில்லை. இப்போதும் அதுதான் நிகழ்திருக்கிறது.கைகளில் கிடைத்த பந்து கைநழுவிப்போயிருக்கிறது. தமிழன் விழிக்கும்போது மீண்டும் கைகளில் சிக்கும் என்று நம்பலாம்.

இந்த தைமுதல் நாளை புத்தாண்டாகவும் பொங்கற் பெருநாளாகவும் கொண்டாடிக்களிக்கும் உள்ளங்களுக்கு வேர்கள் தன் இனிய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.
-----------------------------------------------------------------

இடுகை 0083