வியாழன், டிசம்பர் 29, 2011

மூன்றாமாண்டு முனையில் வேர்கள் !

இன்றோடு ( 29 -12 - 2011 ) இரண்டாண்டு கடந்து மூன்றாமாண்டு முனையில் கால்பதித்து நிற்கிறது வேர்கள்.நினைக்கும்போதே நெஞ்சமெங்கும் பூரித்து குலுங்குகிறது.

இந்த இரண்டாண்டுகளில்..
ஏறகுறைய 80 க்கு மேற்பட்ட முழுமையான பதிவுகள்.
நான்கு இட்சத்துக்கு மேற்பட்ட உலகளாவிய வருகை...

ஏறத்தாழ நாற்பத்தோராயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களின் பார்வை..
நறுக்கு தெரித்தாற்போல் அவ்வப்போது அள்ளிவீசப்பட்ட மறுமொழிகள்..
இண்டி பிளாகர் திரட்டியின் மூலம் தொடர்ந்து பெறப்பட்ட பல்வேறு பெறுதற்கறிய நட்புகள்..இன்னும் எத்தனை எத்தனையோ..

இவையனைத்தும் நான் சற்றும் எதிர்பாராமல் ஏற்பட்டவை என்றே கருதுகிறேன்.
பொழுது போக்கு என்ற கோணத்தில் எந்தவொரு எழுத்தையும் நான் விதைத்ததில்லை என்ற சிறுகதைமன்னன் ஜெயகாந்தனின் வரிகளை இன்னும் நேசிப்பவன் நான்.படைக்கப்படுகிற ஒவ்வொரு படைப்பும் இதே திசையில் பயணிக்கவேண்டுமென்பதில்ஆழ்ந்த ஆசை கொண்டவன் .

கடந்த காலங்களில் வேர்களில் வெளிப்படுத்தப்பட்ட அல்லது இனி வெளிப்படுத்தப் படப்போகிற கருத்துக்கள் யாவையும் முடிவானவை என்று நான் கருதியதேயில்லை.ஒவ்வொன்றும் வாய்ப்பு கிட்டும்போது விவாதிக்கப்பட வேண்டுமென்பதே என் விருப்பம்.
சமீபகாலங்களில் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் வேர்கள் தன் கருத்துக்களை வெளிப்படுத்த இயலாமற் போயிருக்கிறது.அதனாலேயே அவைகளின் விளைவுகளை அங்கீகரிக்கிறது என்றோ எதிர்த்து நிற்கிறது என்றோ பொருள் இல்லை என்றே கருதுகிறேன்.அவற்றை அந்தந்த நேரங்களில்

பிரதிபலிக்க போதுமான நேரமின்மையே தவிற வேறொன்றுமில்லை.
இன்றைய எழுத்துக்களில் பாலியலை மட்டுமே அச்சாக வைத்து வரிக்கவிதைகள் வடிக்கும் இளைய தலைமுறை மீண்டும் யோசிக்கவேண்டும். வாழ்வியலில் பாலியல் ஒரு பகுதியே தவிற அவையே வாழ்க்கையல்ல என்று வேர்கள் கருதுகிறது.இன்றைய பெண்மை அதனையே உதறி இந்த மண்ணில் மிக உயர்ந்த பதவிகளை பற்றி ஆண்களுக்கே சவால்விடுதலை காணலாம்.இன்றைய சூழலில்பாலியலையும் விஞ்சிய சமூக அவலங்கள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன.அவைகளையும் முதன்மைப்படுத்தி குரல் கொடுக்க முன்வரவேண்டுமென்பதே வேர்களின் தீரா விருப்பம்.

வேர்களை காணுகின்ற ஒவ்வொருவரும் அருள்கூர்ந்து தங்கள் உணர்வுகளை மறுமொழி மூலம் வெளிப்படுத்துவார்களேயானால் வேர்கள் தன் எழுத்துப்பிழைகளையும் கருத்துப்பிழைகளையும் தவிற்ககூடும்.ஊக்கமுடன் இன்னும் தன் பயணத்தை தொடரக்கூடும்.
நன்றி...வணக்கம் !
உங்கள் என்றும் இனிய..

பாண்டியன்ஜி
நாகப்பட்டினத்திலிருந்து...!
இடுகை 0082