புதன், டிசம்பர் 08, 2010

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !

சக்கர நாற்காலிக்கு ஒரு சறுக்கல் !
( ஸ்பெக்ட்ரம் ஊழல் -- தினமணியின் அவசரம் -- விகடனின் பரபரப்பு -- ஞானியின் பிதற்றல் )
பாண்டியன்ஜி
தினந்தினம் பாராளுமன்றத்தை தள்ளி வைத்து தள்ளிவைத்து பாராளுமன்றக்கட்டிடமே அரித்துவாருக்கருகில் நகர்ந்து போயிருப்பதாக அண்மையில் வெளியான ஓர் கேலிச்சித்திரத்தைக் கண்டு வெகுவாக ரசித்தேன். தினமலர் நாளிதழில் வெளியான அந்த கேலிச்சித்திரம் என்னையறியாமல் என்முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலுக்கு காரணமாய் அமைந்தது..
நாள் முழுதும் -
ஹோ ... என்ற பேரிரச்சல். கைகளை மேலே தூக்கியவாறு இறுக்கைகளை விட்டு இங்கும் அங்கும் ஓடும் காட்சி .
அனைத்துக்கும் மெல்லிய புன் முறுவலோடு கைகளை அசைத்து அமரச்சொல்லும் பாபுஜியின் புதல்வி மீராகுமாரின் காட்சி . பயனின்றிப்போக.. அடுத்த
சில நிமிடங்களில் எழுந்து அவைக்குப்பின்னால் மறையும் தோற்றம்...
நாள்தோரும் கண்டு சலித்துப்போன தொலைக்காட்சி.
கடந்த 18 நாட்களுக்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சிகளால் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தாங்கள் எழுப்புகின்ற அத்தனை கோரிக்கைகளுக்கும்ஆளும் அரசு அடிபணிய வேண்டுமென்ற எதிர்கட்சிகளின் முரட்டுத்தனமான பிடிவாதம்.
 ஆளுகின்ற அரசு எந்தக்கட்சியைச் சார்ந்தது என்ற அடிப்படையே சந்தேகத்திற்குரியதாக்கப்பட்டிருந்து. ஒருவேளை ஆளுகிற அரசுக்குத் தேவையான பெரும்பான்மை
இல்லாமற்போய் விட்டதோ என்றும் எண்ணத்தோன்றியது.
எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துஆட்சிபீடத்த்தில் அமர இந்த துருப்புச்சீட்டை ஒருபோதும் கைவிடலாகாது என்பதில் எதிர்கட்சிகள் அனைத்தும் உறுதியாக நின்றன. நாடாளுமன்ற இரு அவைகளையும் தொடர்ந்து முடக்குவதன்மூலம் இந்த தேசத்துக்கேற்படும் நஷ்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதையும் அது இவர்கள் சுட்டிக்காட்டுகிற ஸ்பெக்ட்ரம் யூக ஊழல் கணக்கின் மதிப்பைக்காட்டிலும் பல்மடங்கு பெருகக்கூடும் என்பதையும் இவர்கள் உணர்வதாக தெரியவில்லை.
இதே போன்ற கோரிக்கைகளை இதற்குமுன்னால்இவர்கள் ஆளும் பீடத்தில் இருந்தபோது எப்படி எதிர்நோக்கினார்கள் என்பதைக்கூட எண்ணிப்பார்த்ததாக தெரியவில்லை.
மத்திய மாநில அரசுகளின் ஒவ்வொரு இலாக்காகளிலிருந்து கிடைக்கப்பெருகிற எண்களை அடிப்படையாகக்கொண்ட தகவல்களைத்தணிக்கைக்குட்படுத்தி புதிய எண்ணிக்கையைக் கண்டறிந்து குற்றங்குறைகளை சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட இலாக்காக்களுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கமான ஒன்றுதான்.அறிக்கைகளில் காட்டப்பெற்ற குறைகளை நிவர்த்தி செய்து பதிலறிக்கை சமர்ப்பிப்பது சம்மந்தப்பட்ட
இலாக்காவின் கடமை.
பெரும்பாலும் இது போன்று குறைகள் சுட்டிக்காட்டப்பெரும் தணிக்கை அறிக்கைகளை அரசின் எந்தவொரு இலாக்காவும் இதுவரை ஒரு பொருட்டாகவே
கருதியதில்லை என்பதுதான் உண்மை.
இந்த முறை தொலைத்தொடர்புத்துறைக்கு தரப்படவேண்டிய இதுபோன்றவொரு தணிக்கை அறிக்கை மாறாக இந்திய பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் முன்னதாகவே கிடைத்திருக்கிறது. இந்திய பத்திரிக்கைகளோ இலாக்கா அரசு நீதிமன்றம் இவைகள் அனைத்தையும் தாண்டி
தலைமை வகித்த அமச்சரையே குற்றவாளியாக்கி பின் தீர விசாரிக்கத் துவங்கியிருக்கின்றனர்.யூகங்களையே முடிவாக்கி திரும்பத்திரும்ப கொட்டை எழுத்தில் அச்சிடுவதன் மூலம் விற்பனையையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சம்பந்த்ப்பட்ட இலாக்கா அமைச்சர் முழுமையாக ஊழல் புரிந்திருக்கலாம் அல்லது தவறான வழிகாட்டுதலின் மூலம் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அரசின் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.அல்லது இலாக்கா ஊழியர்கள் இந்த இழப்புக்கு காரணமாயிருக்கலாம்.
கண்களால் காண்பது காதுகளால் கேட்பது இவைகளைத் தவிர்த்து தீர ஆய்ந்து அறிவதே அறிவு.
இருந்த போதிலும் -
எதிர் கட்சிகளின் கடுமையான கோரிக்கைக்கிணங்கி சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதவி விலகியிருக்கிறார். அதுமட்டுமன்றி
ஸ்பெக்ட்ரம் பிரச்சனை நீதிமன்றத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. நீதிமன்றமும் தன் விசாரணையைத் துவக்கி விட்டது.நாட்டுக்கேற்பட்ட அல்லது ஏற்படயிருந்த நஷ்டத்தையும்அதன் மூலம் ஆதாயம் அடைந்த அத்தனை பேர்வழிகளையும் நீதிமன்றம் அடையாளம் காட்டவேண்டும். ஊழல் நிறைந்த இந்த தேசத்தின் ஒரே நம்பிக்கை இன்று மிச்சமிருக்கிற நீதிமன்றங்களே.
இதற்குள் இந்த தேசத்தின் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் தங்கள் பங்குக்கு பல்வேறு கோணங்களில்
குற்றங்களையும் அதற்கான தண்டனையையும் அதன் மூலமாக கலைஞருக்கும் அவர் கட்சிக்கும் ஏற்படக்கூடிய சரிவையும் அதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் பரவலக வெளிப்படுத்தத் துவங்கிவிட்டனர்.
வேஷ்டி கட்டிக்கொண்டு டெல்லிக்கு போனால் எத்தனை கேவலமா பாக்கிறான். - என்று ஓர் மேதாவி எழுதுகிறார். டெல்லிப்பட்டணத்தில்
பேண்ட் அணிந்த அத்தனை பேரும் பரமயோக்கியர் என்பது இவரது எண்ணம்.
 கொள்ளைபோன பணத்திலே சரிந்து போன அமெரிக்க அரசையே தூக்கிநிறுத்லாம் - என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர். ஆலமரத்தடியிலே அமர்ந்து கற்பனையில் தயிர் விற்றவனின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
இன்னொரு அறிஞரோ....பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களால் டெல்லிப்பட்ணமே நாற்றமடிக்கிறது. - என்று கட்டுரை எழுதுகிறார். ( நாற்றம் என்ற சொல்லுக்கு மணம் என்றே பொருள் என்று கருதுகிறேன்.)
பதவிப்பேராசையும் அதிகார அத்து மீரல்களும் நிறைந்த எந்தவொரு அரசியல்வாதியின் அந்தரங்கத்தொலைபேசி உரையாடல்கள் எப்போதுமே மணம் பரப்பியதில்லை என்பதை அறிந்திருப்பாரோ என்னவோ.அரசு சலுகைகளை ஒரு சமயத்தில் எதிர்நோக்கிய இந்த மேதாவியின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து கேட்டுருந்தாலும்இப்படியொரு பிரத்தியோகமான துர்நாற்றத்தைதான் நுகர்ந்திருக்க முடியும்.
ஒவ்வொருமுறை மந்திரிசபை ஏற்படும்போதும் அல்லது விரிவாக்கப்படும்போதும் சம்மந்தப்பட்ட தலைகளின் தொலைபேசி உரையாடல்களை தொகுப்போமானால் விதம் விதமான துற்நாற்றங்களை நுகரமுடியும். இதற்கு இந்த நாட்டில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல என்பதை உணரவேண்டும்.பெரும்பாலான இலாக்கா நிர்வாக பதவிகளுக்கு கூட இது போன்ற பேரமே நிகழ்கிறது.
கலைஞரின் வயோதிகம் இத்தகய கூச்சலுக்கு இடமளித்துவிட்டது துரதிஷ்டமானதுதான். கலைஞரின் வாரிசுகளே தமிழகத்தின் தனிப்பெரும் தலமைக்கு தீராத அவப் பெயரை தேடித்தந்திருக்கிறார்கள். கலைஞரின் அடிப்படை வரலாற்றை ஒவ்வொருவரும் ஊன்றி படித்திருப்பார்களேயானால் இப்படியொரு இழுக்கு ஏற்பட இடமளித்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இன்றைய பணமும் பதவியும் கலைஞரின் உழைப்பையும் திறனையும் மறைத்திருக்கிறது.
கறைபடிந்த கரங்களையும் பதவிப் பித்தர்களையும் உதறித்தள்ளி தி மு க தன் பயணத்தை தொடரவேண்டும்.
தந்தை பெரியார் வழியில் அண்ணா துவக்கிய இயக்கம் தமிழ் மண்ணுக்குத்தேவை.
 இது போன்ற தருணங்களில் கலைஞர் ஜாதிய ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்ற குரல் கேட்கிறது.
திரும்பிப்பாற்கிறேன். அணிவகுத்து கூச்சல் எழுப்பும் வரிசையில்...
தினமணி - விகடன் - கல்கி இதழ்கள் -- அரசியல் நோக்கராக பேசப்படும் துக்ளக் சோ -- ஊடகங்களில் உளரும் ஞாநி.
முன் நிலையில் இவர்களைக்காண நேருகிறது

-------------------------------------------------------------------
இடுகை 0033
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழியிடுங்கள் (comment )