சனி, நவம்பர் 08, 2014

பெரியார் என்ன செய்தார் ? -வல்லமை

  • இந்த வம்பு இந்த பதிவுலேயே தொடர்கிறது ....
    பெரியார் என்ன செய்தார்  -  

    ·       வல்லமை இணைய இதழில் திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை எழுதிய கட்டுரையைத்தொடர்ந்து தொடருகின்ற வம்பு. 

    ·       தேமொழி wrote on 22 October, 2014, 8:50
    நன்றி அம்மா.  உண்மையில் பலருக்குப் பெரியாரின் அருமை புரிவதில்லை.  சுருக்கமான, நல்ல பல முக்கியக் கருத்துக்களையும் தொகுத்துவிட்ட நல்லதொரு கட்டுரையை வழங்கியதற்கு நன்றி.  
    சென்ற வாரக் கட்டுரையில் எனக்கு எவ்வொரு குழப்பமுமில்லை.  அடிப்படையாக தன்மைதிப்பினை மக்களுக்கு உணர்த்த எழுந்த இயக்கத்தின் வழி வந்த கட்சி ஒன்று மக்கள் தடால் தடால் என்று காலில் விழுமளவுக்கு தன்மைதிப்பற்ற கூட்டத்தை உருவாக்கி விட்டதையும்
    சிந்தித்து உண்மையை அறிய சொன்ன  இயக்கத்தின் வழிவந்த மக்கள் சிந்திக்கும் திறனின்றி, குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் நீதித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு சிந்தனையற்றுப் போனதையும்..
    என இரு முக்கியக் காரணங்களை முன்வைத்து கண்டித்தது அக்கட்டுரை. எனக்கும் பெரியாரின் போராட்டம் எல்லாம் வீணாகப் போனதே என்ற ஆயாசம்தான் அடிக்கடி தோன்றுகிறது. 
    அக்கட்டுரையைப் புரிந்து கொள்வதில் எனக்கு எந்த ஒரு சிரமும் இருக்கவில்லை.  தொடர்ந்து வழங்கும் உங்கள் கட்டுரைகள் யாவையுமே  நான் விரும்பிப் படித்து வருகிறேன். தொடருங்கள். 
    மிக்க நன்றி.
    அன்புடன்
    ….. தேமொழி
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 22 October, 2014, 22:42
    பெரியார் என்ன செய்யவில்லை என்பது என் கேள்வி.
    முது வயதுப் பெரியார் தனக்குப் பணிசெய்ய வந்த இள வயதுப் பெண்மணி  மணி அம்மையாரைச் சொத்துரிமைக்காக மணந்ததை, அண்ணாத்துரை போன்ற பெரியாரின் பிரதான சீடர்களே எதிர்த்து, வெறுத்துத் திராவிடக் கட்சியிலிருந்து பிரிந்து போய் திராவிட முன்னேற்றக் கட்சியை ஆரம்பித்தனர்.  பெரியார் பிரிவைத் தடுக்க ஏதும் செய்யாது தி.மு.க. வைக் கேலி செய்து வந்தார். அண்ணாத் துரைக்குப் பிறகு தி.மு.க இரண்டாகி கருணா தி.மு.க. வாகவும், எம்ஜியார் தி.மு.க. வாகவும்  பிளவு பட்டது. இப்போது எம்ஜியார் தி.மு.க. மாறிப் போய் ஜெயலலிதாவின் அம்மா தி.மு.க. வாகப் புதிய பாதையில் போகிறது.  
    அரசாங்கத்தில் நேரடியாக ஈடுபடாத பெரியாரின்  திராவிட கட்சியே  ஒற்றுமை யின்றி இப்படிச் சிதைந்துபோய் இரண்டு, மூன்று போட்டிக் கட்சிகளாய்ப் பிரிந்து அரசியல் சண்டைகளில் ஈடுபட்டு நீதி மன்றங்கள் தண்டித்துத் தமிழ்நாட்டில் / இந்தியாவில் நிலையற்ற கொந்தளிப்பு ஆட்சியை மாறி, மாறி திராவிட முன்னேற்றக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. 
    பெரியார் தமிழர்களிடையே உள்ள சமூகக் குறைபாடுகளை எடுத்துக் கூறினாலும் ஒற்றுமை உண்டாக்கும் நீதி நெறிகளைப் பரப்ப வில்லை. செய்து காட்டவும் இல்லை. தமிழருக்குள் பெரும் பிரிவுகள் உண்டாவதை அவர் தடுக்க வில்லை
    சி. ஜெயபாரதன்.  
    ·       https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgTxRKa-WDogxfBNVZhaYWf38Vcz9LMAVbPrFdYsR4zOxlKlDlCTtZ7G5vkesSZaDOY5h-eWJrdKomtZ_5RMgAPA8VfGABg1DczcDXANgWGy3zFNmDqqZ18NfIF3ZCNMbDq_5KxBbe7bowuHpDWzmUtJMqDSfQHZN0YdzasZMYA0P2zz7gRY_lrl_Fgmgwm0vY=

    விஜ‌ய‌ராக‌வ‌ன் wrote on 23 October, 2014, 19:43
    திருமதி நாகேஸ்வரி அண்ணமலை அவர்கள் பெரியார் என்ன செய்தார் என அவர் செய்த அரசியலை , முக்கியமாக ஈவெரா காங்கிரஸ் ஆதரவாக அல்லது எதிராக ஏன் என்ன செய்தார் என ஈவெரா ஆதரவாளர்கள் பார்வையில் எழுதியுள்ளார். அதை நான் அலசப்போவதில்லை , ஏனெனில் அது கட்சிப்பார்வை, ஒரு காலும் இண்டெர்நெட் வாதங்களால் மாத்த முடியாது. மேலும் அது 80 வருட முன் அரசியலை பற்றி ஒரு பார்வை வைக்கிறது, அதை இப்போது அலசி ஒரு பயனும் இல்லை.
    ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை வேண்டும் என்பது பெரியாரின் கொள்கைகளில் ஒன்று என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது ? தமிழ் காட்டுமிரண்டி மொழி, அதை கைவிட்டு ஆங்கிலத்தில்தான் குடும்பங்களுக்குள் பேச வேன்டும், தமிழ் மரபும், இலக்கியங்களும், பரம்பரைகளும் காட்டுமிரண்டிதான் என 40-50 வருடங்கள் ஓயாது பிரச்சாரம் செய்து, அதையும் பெருமையுடன் சொன்னவதான் சுயமரியாதையை அதிகரித்தவர் என நம்ப முடியவில்லை. சரி தமிழர் பண்பாடுதான் காட்டுமிரண்டி என்றால் , அதன் தீர்வு என்ன ? பிரிட்டிஷ் காலனீயத்தை கைவிடக்கூடாது. உலகம் முழுவதும் பல நாடுகள் ஐரோப்பிய காலனீயத்தை எதிர்த்து போராடும் போது,ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை ஆதரித்தது எவ்வகையில் பகுத்தறிவு, எப்போது சுயமரியாதை ஆனது. ஈவெராவின் சிந்தனைகள் 19ம் நூற்றாண்டு காலனீயத்தால் உண்டாக்கப்பட்ட்வை. இதை திரும‌தி நா.அ. இது சரியோ தவறோ; இது சமூக நீதிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டும்என‌ சால்ஜாப்பு சொல்ல‌ முடியாது. அப்ப‌டியென்றால் ச‌மூக‌நீதிஎன்ற‌ போர்வையில் என்ன‌ வேன்டுமானாலும் சொல்ல‌லாம், அன்னிய‌ர்க‌ளின் காலை பிடிக்க‌லாம், சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதும், அவ‌ர்க‌ள் திற‌மை மீதும் மொத்த‌ அவ‌ந‌ம்பிக்கை வைக்க‌லாம் . அது என்ன ஈவெரா பிராண்டு சமூகநீதி” – தமிழர்கள் தங்கள் மரபிலும், மொழியிலும் பூரண அவநம்பிக்கை வைக்க வேண்டும், என்ன ஈவெரா பிராண்டு சமூகநீதிஅரசியல் சுதந்திரம் வேண்டாம் என்பது? ம‌ற்ற‌ நாடுக‌‌ளில் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரை சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் தூக்கில் இட்டுருப்பார்க‌ள். ஜ‌ன‌நாய‌க‌அமெரிக்க‌ நாடுக‌ள் பிரிட்ட‌னுட‌ன் போரிட்டு 1782ல் சுத‌ந்திர‌ம் அடைந்த‌வுட‌ன் , ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பிரித்தானிய‌ முடிய‌ர‌சின் ஆத‌ரவாள‌‌ர்க‌ள் க‌ன‌டாவிற்க்கு உயிருக்காக ஓட‌ வேண்டியிருந்த‌து.
    ச‌ரி அது போக‌ட்டும், சமூக‌‌த்தில் எவ்வ‌ள‌வோ அச‌டுக‌ள் உள்ள‌ன‌ர் ; 50 வருடம் முன் இருந்த அசடுகளை இப்போது நினைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை அப்ப‌டிப்ப‌ட்ட‌ அச‌டுக‌ளை ஏன் தோள்மேல் தூக்கி பெரியார் என‌ துதி பாட‌ வேண்டும்? அதுதான் என் கேள்வி , என் எதிர்ப்பு . ப‌குத்த‌றிவின் முத‌ல்ப‌டி ஒரு ம‌னித‌னை ம‌னிதாக‌ பார்க்க‌ வேன்டும், அதை விட்டு த‌மிழ‌ர்களின் சுய‌ ம‌ரியாதையை குலைத்த‌ ஒருவ‌ர்தான் பெரியாரா?
    ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ ? உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான்.
    த‌க்கார் த‌க‌விலார் அவ‌ர‌வ‌ர் எச்ச‌த்தால் அறிய‌ப்ப‌டும்
    என்ப‌து திருக்குற‌ள். ஈவெராவின் அரசியல் எச்ச‌ங்க‌ள் ஈவெராவை அடையாள‌‌ம் காட்டுகிற‌‌ன‌.
    ஒரு சின்ன‌ உதார‌ண‌ம் : ஈவெரா ப‌க்த‌ர்க‌ள் ஐ.நா. ஈவேரா பெரியாரை தென்கிழ‌க்கு ஆசியாவின் சாக்கிர‌டீஸ் என‌ அறிவித்து விட்ட‌ன‌ர்என‌ பெருமையாக‌ சொல்லி வ‌ருகின்ற‌ன‌ர். இந்தியா தென் ஆசியாவில் இருக்கு; தென் கிழ‌க்கு ஆசியாவில் அல்ல‌; ஆனாலும் இந்த‌ முர‌ணைப் பார்க்காம‌ல் ப‌க்த‌கோடிக‌ள் ஐநா ப‌ட்ட‌த்தைபெருமையாக‌ பேசுகின்ற‌ன‌ர்.
    வ‌ன்பாக்க‌ம் விஜ‌ய‌ராக‌வ‌ன்
    ·       https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgoxtBtqKV_inhCYBknG_9J_3wAv6rhtqfgMpzxZAfnLxCxYWxdEtZxfUnBdZp2h15fUYV-E4KRtrS_9cySQ4JpLq8rl8Sv8rRwwN7OPY-2lN6DKRps73J6ddUbtdzzlAWv_wXEM8H3LAZkP1F5vM1Dr8kq4Bix5XURvsU-9dX6pXZndP6Xhu2gdSlP0eKYRuI=

    ஒரு அரிசோனன் wrote on 24 October, 2014, 1:53
    உயர்திருவாளர்கள் ஜெயபாரதன், மற்றும் விஜயராகவன் அவர்களே,
    நான் சொல்ல நினைத்தை, அவை அடக்கம் காரணம் கருதிச் சொல்லாமல் இருந்ததைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
    ·       https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgKJBSl70KYWKuXtI52UXv5gD4c7m3b566TDXem6WJemVrZS10G1McEaejeIIv0KyzBdev8g2kq3nOydlDslJ5pxhQmLLtrr-t_UmK75_Qa82d8WVnxjzANJlXciIAhSjwcEvF_Rn_G4oVI2KNXoaxZzdrKG511xiIAuKDSxdjWVZ-ti9jycX9MfDMz2cbFeqs=

    k.ravi wrote on 24 October, 2014, 16:19
    I do not propose to endorse or challenge nageswari annamaki’s views on periyar. However i would rest saying that even after barathi such things are happening. K Ravi
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 24 October, 2014, 19:46
    பெரியார் செய்த மாபெரும் தவறு திராவிட நாட்டுப் பிரிவினைப் போராட்டம். இந்திய தேச விடுதலை வேண்டாம் என்று முரணாகப் பேசிக் கொண்டு பெரியார், எல்லையே இல்லாத, யார் திராவிடர் என்று விளக்கிச் சொல்லாத, ஒரு கற்பனைத் திராவிட நாட்டைஉருவாக்கி அது பிரிய வேண்டும் என்று தமிழ் மக்களைத் திசை திருப்பி, பிரிவினை விதைகளைத் தூவி, விடுதலை நாட்டில் தமிழரை ஆரிய / திராவிடராய்ப் பிரித்து சண்டைகள் உண்டாக்கியது.  
    திராவிடர் என்பவர் யார்  ?   திராவிட நாடென்பது எது ?
    சி. ஜெயபாரதன்
    ·       பாண்டியன்.ஜீ

    வில்லவன் கோதை wrote on 29 October, 2014, 19:45
    அன்பார்ந்த ஜயபாரதன்
    விஞ்ஞானத்திலும்  இதிகாசத்திலும் நீங்கள் கொண்ட ஈடுபாடு இந்த மண்ணில் ஏற்பட்ட சமூக மாற்றங்களில் உங்களுக்கில்லை என்பதை உணர்கிறேன். தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட தலைவர்களுல் தந்தை பெரியார் தலையாயவர்.மேலே எழுப்பப்பெற்ற கேள்விகள் அத்தனையும் ஒன்றும் புதிதானவை அல்ல. திரும்பத்திரும்ப பதிலளித்தவைதான். பெரியாரை முழுமையாக உணர அவர் விட்டுச் சென்ற எழுத்துகளே பேசும்..வரலாற்றை புரட்டிவிட்டு  பேசுங்கள்.
    வில்லவன்கோதை
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 30 October, 2014, 0:28
    நண்பர் வில்லவன் கோதை,
    பெரியார் ஒரு பெரிய சீர்திருத்தப் பேச்சாளியா இல்லையா என்பது இங்கு தர்க்க மில்லை. பெரியார்தான் தமிழ்நாட்டைச் சீர்திருத்தினார், மற்ற மாநிலங்கள் மூடத் திசையில் போய்க்கொண்டிருக்கின்றன என்று சொல்கிறீர்களா ?  பகுத்தறிப் பெரியார் மட்டும் இருந்ததால் தமிழ்நாடு எந்த விதத்தில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி உள்ளது ?
    ஆன்மீகத்தில் மூழ்கிய விடுதலை இந்தியா  [தமிழ்நாடு உட்பட] சமூக வளர்ச்சி, விஞ்ஞானத் துறையில் முன்னேறி யுள்ளதற்கு அரசியல் சட்டம் / சாசனம் வகுத்த அம்பேத்கார், மத ஒற்றுமைக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் பாடுபட்ட காந்திஜி, பண்டித நேரு, டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் அப்துல் கலாம் போன்றோர் காரணகர்த்தாக்கள்.  
    பெரியார் பாராளுமன்ற அரசியல் அமைப்பு / தேர்தல் குடியரசு முறைகளை வெறுத்தவர்.
    சி. ஜெயபாரதன்
    ·       பாண்டியன்.ஜீ
    வில்லவன் கோதை wrote on 2 November, 2014, 1:31
    முதலில் சக மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்பதே தந்தை பெரியாரின்  தனித்த சிந்தனை.எதையும் பகுத்றிவு கொண்டு பார் என்பது அவர் பேச்சு.
    இந்த தமிழ் மக்கள் எவ்வகையிலாவது மற்றவர்களைப்போல முன்னுக்கு வரவேண்டுமென்பது அவர் பேரவா.அதற்காக மொழிமுதற்கொண்டு எதையும் சமரசம் செய்துகொள்ள முன்வந்தவர் அவர்.
    ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சுய சிந்தனைகளோடு இந்த மண்ணில் சுற்றிச்சுற்றி வந்தவர். இறக்குமதி சிந்தனை அல்ல  
    அவர் தோற்றிவைத்த திராவிட இயக்கத்தின்  முன்னும் பின்னும் இந்த தமிழ் மண்ணை உங்களால் காணமுடியுமென்றால் தந்தை பெரியாரின் இடம் உங்களுக்கு தெளிவாக தெரியக்கூடும்.
    ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் ஒளிரும் வரிசை விளக்குகளால் கணிப்பதல்ல.பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள்.தமிழகம் எத்தனை உயரம் என்பது புரியும்.
    இடுப்பிலே துண்டும் காலணி அணியமுடியாத கால்களும் தனிக்குவளை தண்ணீரும் இணையத்தில் வக்கணை பேசி வலம் வரும்  இன்றைய இளையதலைமுறைக்கு வேண்டுமானால் பெரியார்என்ன செய்தார் என்று அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.
    நான் நேசிக்கும் நீங்களுமா.
    சாகும் வரை இந்த தமிழ் மக்ளுக்காக சுழன்றுத்திறிந்த ஒரு பெரும் தலைவரின் வரலாற்றை  அம்பேத்காரும் காந்தியும் என்று ஒரே வரியில்  உங்களால் எப்படி எழுத முடிந்தது..
    வில்லவன் கோதை  
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 3 November, 2014, 0:57
    நண்பர் வில்லவன் கோதை ! ///முதலில் சக மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்பதே தந்தை பெரியாரின் தனித்த சிந்தனை.எதையும் பகுத்றிவு கொண்டு பார் என்பது அவர் பேச்சு.//// இதைச் சட்ட ரீதியாக மாநிலங்கள் அனைத்திலும் [தமிழ்நாடு உட்பட] நிலைநாட்டியவர் டாக்டர் அம்பேத்கார். பெரியார் அல்லர். காந்திஜியும், அம்பேத்காரும் சாகும்வரை சமூகச் சம மதிப்புக்காகப் பணிபுரிந்தவர்கள்தான். பெரியார் வசித்த தமிழ்நாட்டில் இப்போது பிராமணர் அல்லாத மேற்குடி மக்கள் தாழ்த்தப் பட்டோரை மிதித்துக் கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன ? சி. ஜெயபாரதன்
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 3 November, 2014, 1:03
    நண்பர் வில்லவன் கோதை ! ////பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப் பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள். ///// இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ? சி. ஜெயபாரதன்
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 3 November, 2014, 1:16
    நண்பர் வில்லவன் கோதை ///இடுப்பிலே துண்டும் காலணி அணியமுடியாத கால்களும் தனிக்குவளை தண்ணீரும் இணையத்தில் வக்கணை பேசி வலம் வரும் இன்றைய இளையதலைமுறைக்கு வேண்டு மானால் பெரியார் என்ன செய்தார் என்று அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.
    நான் நேசிக்கும் நீங்களுமா ? ///// இது தனி மனிதர் கீறல் !!!! என் தந்தையார் இந்திய சுதந்தரப் போராட்டாத்தில் பங்கெடுத்துக் காந்திஜி ராஜாஜி, காமாராஜருடன் சிறை சென்றவர். 1939 இல் தான் நடத்திய சோப் கம்பெனியில் தாழ்த்தப் பட்டோரை ஊழியராக்கி அவரது மண் கலயங்களைக் கண்டு தாங்காமல், மூடியுள்ள ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரங்களை அளித்தவர். பெரியார் இந்திய சுதந்திரத்தை வேண்டாம் என்று வெறுத்தவர். சி. ஜெயபாரதன்
    ·       பாண்டியன்.ஜீ

    வில்லவன் கோதை wrote on 4 November, 2014, 12:26
    அன்பார்ந்த ஜயபாரதன்
    சமூக நீதிக்கு டாக்டர் அம்பேத்கார், தேசதந்தை காந்தீஜி செய்தது சொல்லியது எல்லாம் பொதுவானவைதாம் அவர்கள் பங்கு தமிழகத்தை பொறுத்தவரை மிகமிகக்குறைவானதுதான். அம்பேத்காரே தந்தை பெரியாரை பெரிதும் மதித்தவர். 
    கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் அன்நாளில் கடைபிடிக்கப்பெற்றுவந்த குடிக்கின்ற தண்ணீருக்கு தனிக்குவளை முறைதான் பின்னாளில் திராவிட இயக்கம் எழுச்சிபெற காரணமாயிற்று தந்தை பெரியாரே முன்னின்று நிகழ்த்திய போராட்டம் அது.அவர் வாழ் நாளில் தமிழர்க்காக நிகழ்த்தாத போராட்டங்கள் இல்லை.. அவரை எதிர்த்துப் பேச துணிவுமிக்க தலைவர்களும் அ்ன்றில்லை.அவர் அரசையோ சட்டதிட்டங்களையோ நம்பவில்லை. மக்களுக்கு கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டால் போதுமென்று நினைத்தார். சாதியும் சமூகமும் இந்த மண்ணில் பக்தியோடு பின்னிக்கிடக்கிறது.என்பதை கண்டவர் பெரியார். 
    அவர் கண்ட பெரும்பாலான கனவுகள் வேறெந்த மாநிலத்திலும் முதலாக தொடர்ந்து கட்டிலேறிய திமுக செய்து முடித்தது.இவைகளுக்கான ஆதரங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது அரசு சட்டமன்ற ஏடுகளிலும் காணக்கிடைக்கிறது.
    36 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிகேஷன் துறையில் பணி செய்தவன் நான் ..கூடங்குளம் சார்ந்த உங்கள் கட்டுரையை பலருடன் பகிர்ந்து
    கொண்டவன்.இணையத்தில் அறிவியலை தொடர்ந்து எழுதும் உங்கள் ஊக்கத்தை பார்த்தவன்.
    இணையத்தில் ஈசல்களாய் படர்ந்து எச்சல் உமிழும் பெரும்பாலான இன்றைய தலைமுறையக்கருத்தில் கொண்டே அந்த வரிகளை குறிப்பிட்டேன்.
    நேருக்கு நேராக விவாதித்தே பல விஷயங்களில் ஒருகோட்டுக்கு நம்மால் வரமுடியவில்லை.உங்களுடைய கல்வியும் நீங்கள் வளர்ந்த சூழலும் என்னிலும் மாறுட்டிருக்கக்கூடும்.
    பெரியார் ஏன் ஒரு பொருந்தா திருமணத்தை செய்தார்
    பெரியார் ஆங்கிலத்தை படிக்கச்சொல்லி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஏன் குறிப்பிட்டார்
    பெரியார் இந்திய சுதந்திரத்தையும் சட்டதிட்டங்களையும் ஏன் வெறுத்தார்.
    நாத்திகரான பெரியார் ஏன் ஆலயங்களில் போராட்டம் நிகழ்த்தினார்
    பெண்ணுரிமைக்காக அவர் கொடுத்த குரல் என்ன
    இவற்றையெல்லாம் பின்னூட்டங்களில் விவாதிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் ஏற்கக்கூடிய பதில்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.
    கொஞ்சம் பெரியாரையும் வாசித்து பாருங்களேன்
    வில்லவன்கோதை 
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 4 November, 2014, 20:33
    நண்பர் வில்லவன் கோதை,
    /// மக்களுக்கு கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டால் போது மென்று நினைத்தார். சாதியும் சமூகமும் இந்த மண்ணில் பக்தியோடு பின்னிக் கிடக்கிறது.என்பதை கண்டவர் பெரியார்./// 
    தமிழ் நாட்டில் செல்வந்தப் பெரியார் இரவீந்திரநாத் தாகூர் போல் தன் காலத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைக் கூட அமைக்க வில்லையே !
    தமிழ்நாட்டில் பெரியார் தீவிர ஒழிப்புக் கொள்கைகளான ஜாதிகளோ, மதங்களோ, தெய்வங்களோ, சமூக ஏற்றத் தாழ்வுகளோ எங்காவது அழிந்து போய்விட்டனவா ?  இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப முழக்கினாரே தவிர எப்படிச் செய்வது என்று வழிமுறைகளோ, விதி முறைகளோ, நெறி முறைகளோ சட்ட ரீதியில் அமைக்க வில்லை.  
    45 ஆண்டுகளாக ஆளும் அவரது திராவிடக் கட்சிகள் இப்போது ஜாதீய ரீதியில் தான் கல்வி, இடத் தேர்வு, நிதிக் கொடைச் சலுகைகள் கிடைக்க முயல்கின்றன. ஆகவே 21 ஆம் நூற்றாண்டில் பெரியார் வெறுத்த ஜாதிகள் எண்ணிக்கைகள் எடுக்கப்பட்டு இந்தியாவில் [தமிழ்நாடு உட்பட] ஆழமாய் வேரூன்றிக், கிளைகள் விட்டு, விழுதுகளோடு வலுத்து நிற்கின்றன !
    எனது 80 வயது அனுபவத்தில் பெரியாரைப் பற்றி நன்கு அறிவேன் நண்பரே !
    சி. ஜெயபாரதன்
    ·       பாண்டியன்.ஜீ
    வில்லவன்கோதை wrote on 5 November, 2014, 10:16
    உங்களுக்கு அகவை எண்பது.! 
    நெடுநாள் வாழ வாழ்த்துக்கள் !
    வில்லவன் கோதை
    ·       https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgTxRKa-WDogxfBNVZhaYWf38Vcz9LMAVbPrFdYsR4zOxlKlDlCTtZ7G5vkesSZaDOY5h-eWJrdKomtZ_5RMgAPA8VfGABg1DczcDXANgWGy3zFNmDqqZ18NfIF3ZCNMbDq_5KxBbe7bowuHpDWzmUtJMqDSfQHZN0YdzasZMYA0P2zz7gRY_lrl_Fgmgwm0vY=

    Vijayaraghavan wrote on 5 November, 2014, 16:42
    பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான முறையான அட்டவணையே இல்லையென்பதை உணருங்கள்.வில்லவன் கோதை
    அப்படிப்பட்ட அட்டவணை எல்லா இந்திய மாகாணங்களிலும் உண்டு.http://en.wikipedia.org/wiki/List_of_Scheduled_Castes_in_Delhi
    இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது போல் சொல்லுவது ஈவெரா மாய‌பிம்ப தூக்குதல். நகரமயமாதல், தொழில்மயமாதல், ஜாதி பேத‌ங்களில் நம்பிக்கை இல்லாத சட்டம், நீதி, அரசாங்கம் ஆகியவைதான் ஜாதி வேறுபாடுகள் குறைந்ததில் அடிப்படை காரணங்கள். அது 150 வருஷங்களாக இந்தியாவில் நடப்பது; எல்லா மாநிலங்களுக்கும் அது பொருந்தும். பக்தகோடிகள் எல்லாம் தங்கள் தலைவரால் ஏற்பட்டது என்ற புனைவு போன்ற ஹாஸ்யம் இல்லை. உதாரனமாக 8 மில்லியன் ஜனத்தொகை உள்ள மெட்ராஸ் எப்படி ஜாதி வேற்றுமையை குறைத்தது என பலர் நேரடியாக பார்த்தவர்கள். (http://www.jeyamohan.in/?p=63812) எல்லாம் ஜாதி நோக்கோடு பார்ப்பது என்ற ஈவேராவின் பழக்கம், தமிழ்நாட்டில் தொத்துநோயாக பரவி ஜாதி பேதங்களை களைவதில் முட்டுக்கட்டையாக உள்ளது. விஜயராகவன்
    ·       பாண்டியன்.ஜீ

    வில்லவன்கோதை wrote on 5 November, 2014, 22:08
    எல்லாமாநிலத்திலும் அட்டவணை உண்டு.அவற்றில் தமிழகத்தைப்போல முழுமையான பயனாளிகள் இல்லை என்பதே நான் அறிந்த தகவல்..
    வில்லவன் கோதை
    விவாதத்துக்கு இந்த பதிவும் பயனளிக்கும்
    ·       https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgTxRKa-WDogxfBNVZhaYWf38Vcz9LMAVbPrFdYsR4zOxlKlDlCTtZ7G5vkesSZaDOY5h-eWJrdKomtZ_5RMgAPA8VfGABg1DczcDXANgWGy3zFNmDqqZ18NfIF3ZCNMbDq_5KxBbe7bowuHpDWzmUtJMqDSfQHZN0YdzasZMYA0P2zz7gRY_lrl_Fgmgwm0vY=

    விஜயராகவன் wrote on 6 November, 2014, 15:54

    எது முழுமையான பயனாளிகள் நிலை என்பதை காலமெல்லாம் விவாதிக்கலாம். ஜாதி அடிப்படை ரிசர்வேஷன்கள்தான் ஈவேராவின் முக்கிய பங்களிப்பு என்றால், ஜாதி பேதங்கள், ஜாதி உணர்வ்ய் எழுச்சி, ஜாதி அரசியலின் வளர்ச்சியில் ஈவேராவின் பங்கை மறுக்க முடியாது.
    ஒருவர் தொட்டில் முதல் சாகும் வரை ஜாதி சர்டிபிகெட் அடிப்படையில்தான் கல்வி, உத்யோகம், உத்யோக வளர்ச்சி போன்றவற்ரை பெறுவார் என்பது அரசாங்க கொள்கையானல், அது ஜாதி பேதத்தையும், ஜாதி அரசியலையும் அதிகரிக்கத்தான் செய்யும். அரசாங்க கொள்கைகள் ஜாதி குருடுஆக இருந்தால்தால்தான் ஜாதி உணர்வும் வேறுபாடுகளும் குறையும். ஈவெராவின் போலி பகுத்தறிவு நெல்லை நட்டுவிட்டு, கேழ்வரகு அருவடையை எதிர்பார்ப்பது.
    ஈவெராவின் பங்களிப்புகள் என்ன?
    மேற்சொன்னபடி ஜாதி அரசியலை வளர்ப்பது. அதை மறைப்பதற்க்கு Politics of scapegoating வளர்ப்பது. தமிழர்களின் சரித்திரம், பரம்பரை ஆகியவற்றில் காழ்ப்ப்புகாட்டி, அவர்கள் தன் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் தகர்த்தது.
    பிரித்தானிய காலனீயத்தை ஆதரித்தும், சுதந்திரத்தை எதிர்த்தும் தமிழர்களின் சுய ஆட்சி தகுதியின் மீது அவநம்பிக்கையை வளர்த்தது. மற்றபடி அவருடைய படிப்பு குறைவாக இருந்ததால் தூயதமிழ் இயக்கம், லெமூரியா போன்ற பிற்போக்கு கருத்தாங்களை ஆதரித்தது. இன்னும் ஈ.வெ.ராமாசாமி நாயக்கரை பெரியார்”, “பகுத்தறிவு பகலவன்என்ற துதி செய்ய வேம்டுமா; நீங்கள் செய்யலாம்; ஈவெரா எதிர்த்த சுதந்திர இந்தியாவில் , இந்திய குடியரசில் உங்களுக்கு சிந்தனை உரிமை உண்டு.
    ·       சி.ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன் wrote on 6 November, 2014, 20:02
    குறைந்த படிப்புக் கல்வி அறிவு கொண்ட பகுத்தறிவுப் பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்ட மாமேதைகள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கவிச் சக்ரவர்த்தி கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், பாரதியார் போன்ற இலக்கிய ஞானிகள், கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞான மேதைகள் அனைவரையும் முட்டாள் என்று திட்டியவர்.  
    கடவுளை நம்புபவர் எல்லாம் முட்டாள் என்று திட்டிய பெரியார் இந்த மகத்தான பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று ஒருபோதும் ஆராய்ந்து விளக்கிய தில்லை !!!
    சி. ஜெயபாரதன்  
    ·       பாண்டியன்.ஜீ
    வில்லவன்கோதை wrote on 7 November, 2014, 19:47
    வெற்றுக்குரல்கள்
    விஜயராகவன் தாங்கட்கு
    பெரியார் மெத்த படிக்காதவர்தாம் இயல்பாகத்தோன்றிய கருத்துக்களை ஒடுங்கிக்கிடந்த இனத்துக்கு மண்டையில் அடித்துச்சொன்னவர் பெரியார்ஒருவேளை அவர் படித்திருந்தால் அவர் முழங்கிய கருத்துக்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக பேசப்பட்டிருக்கும்.
    உங்களுடைய உரத்த குரலுக்கான காரணத்தை உணருகிறேன். வேறு வழியில்லை இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதுதான்.உலகளாவிய ஊழல் கலாச்சாரத்தில் திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்டுவிட்ட ஒரு சரிவு ஒருகாலத்திலும் பெரியார் சிந்தனைகளை தகர்த்து விட முடியாது.
    வணக்கம்.
    வில்லவன் கோதை
    ·       ஒரு அரிசோனன் wrote on 7 November, 2014, 23:16
    பெரியார் செய்த ஒரே ஒரு சிறப்பான தொண்டு:  சாதி உயர்வு-தாழ்வை நீக்கப் போராடியது.
    அவர் செய்த மகத்தான தீமை:  வெறித்தனமான வெறுப்பை மக்களிடையே ஊட்டி வளர்த்தது.  பாம்பையும், பாரப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிஎன்றாரே, அப்படிப்பட்ட வெறுப்பை யாரும் மக்களிடையே ஊட்டியதில்லை.  அந்த விஷ வெறுப்பு விதை இன்னும் மக்களின் மனதில் (பெரிய அறிஞர்களாக இருந்தால்கூட) ஆலமரமாக வளர்ந்து நிற்கிறதே!  தாழ்த்தப்பட்டோரைப் பார்த்து இப்படிச் சொன்னால் இந்தியாவில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நான் சொல்லவேண்டாம்.  அவருடைய பல கருத்துக்கள், சொற்பொழிவுகள் அமெரிக்காவில் hate speech என்றுதான் கருதப்பட்டிருக்கும்.
    அவர் செய்த தொண்டை விட்டுவிட்டு, அவர் விதைத்த விஷவிதையைப் போற்றி எழுவது அவர் தொண்டையே அடியோடு தகர்ப்பதாகத்தான் தோன்றுகிறது.
    o   https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgTxRKa-WDogxfBNVZhaYWf38Vcz9LMAVbPrFdYsR4zOxlKlDlCTtZ7G5vkesSZaDOY5h-eWJrdKomtZ_5RMgAPA8VfGABg1DczcDXANgWGy3zFNmDqqZ18NfIF3ZCNMbDq_5KxBbe7bowuHpDWzmUtJMqDSfQHZN0YdzasZMYA0P2zz7gRY_lrl_Fgmgwm0vY=
    வ.கொ.விஜயராகவன் wrote on 8 November, 2014, 14:46
    ஈவெரா கருத்துகள் ஒன்றும்கூட ஒரிஜினல் இல்லை; மற்ற இந்திய சிந்தனையாளர்கள் அல்லது இந்திஉஅ மரபிலிருந்து எல்லாம் எடுக்கப்பட்டவை அல்ல. ஈவெரா கருத்துகள் அவருக்கு 75 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலநீய ஆளும் வர்கம் மேலும் ஆங்கில கிருஸ்துவ மத போதகர்களிடம் இருந்து வந்தது . அவர்கள் தங்கள் காலனீய, ஏகதிபத்திய அரசு அதிகாரங்களை ஜஸ்டிபை செய்யவும், தங்கள் ஆட்சிக்கு ஒரு நல்ல காரணம்~ தேடவும், இந்தியர்கள், இந்து மதம், இந்திய சிந்தனைகள், இந்திய மரபுகள் மீதும் காரித்துப்பினர். ஈவெரா அந்த துப்பல்களை புனிதஜலமாக பாவித்தார். சம்பிளுக்கு ஒன்று கூட ஈவெராவிக்கு ஒரிஜினல் சிந்தனை கிடையாது.
    சிந்தனை தளத்தில் அவருக்கு இயல்பாகவந்தது ஈயடிச்சான் காபிதான் . என் எதிர்ப்பு ஈவெரா மீது அல்ல ; ஈவேரா துதி மதம் மீது தான் , அதனால்தான் இந்த பொய் பிம்ப்பத்தை உடைக்க வேண்டியுள்ளது. விஜயராகவன்
    o   பாண்டியன்.ஜீ
    வில்லவன்கோதை wrote on 9 November, 2014, 19:46
    அரிசோனன்
    தாங்கட்கு
    பெரியாரின் போராட்ட காலம் வேறு. அவருடைய தெருப்பேச்சு முழுதும் ஒடுக்கப்பட்ட பாமரர்களுக்கானது. அவர்களை அவர்கள் மொழியிலேயே அவர் எச்சரித்தார்  .தன்பேச்சுக்கேற்ற எந்த தண்டனையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
    அரசியல் எதிரணியைச் சார்ந்தவர்களிடமும் பார்பன சமூகத்தோரிடமும் அவர் எத்தனை நாகரீகமாக நடநது கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்ற.அவர் கடைபிடித்த அரசியல் பண்பு இன்று எவரிடமும் கிடைக்காதவை.அவருடைய தலையாய குறிக்கோள் உறங்கிக்கிடக்கும் ஒரு இனத்தை உசுப்பிவிடுவதுதான்.
    பெற்றமகனுக்கு தாயோ தந்தையோ போதிப்பதைப்போலத்தான்.
    வில்லவன் கோதை
    o   பாண்டியன்.ஜீ
    வில்லவன்கோதை wrote on 9 November, 2014, 19:56
    விஜயராகவன் தாங்கட்கு
    நீங்கள் நிரம்ப அறிந்திருக்கிறீர்கள்.ஆனால்உங்களுடைய கவலையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெற்றிருந்த தலைமைப்பண்பு பறிபோனதைப் பற்றித்தான்.ஒடுக்கப்பட்டுகிடந்த மக்களையும் சேர்த்துக் கொண்டு முன்னேற வேண்டுமென்ற நோக்கமல்ல..உங்களை என் பதில்கள் சமாதானப்படுத்துமென்று  தோன்றவில்லை.
    வணக்கம்
    வில்லவன் கோதை
    o   https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgoxtBtqKV_inhCYBknG_9J_3wAv6rhtqfgMpzxZAfnLxCxYWxdEtZxfUnBdZp2h15fUYV-E4KRtrS_9cySQ4JpLq8rl8Sv8rRwwN7OPY-2lN6DKRps73J6ddUbtdzzlAWv_wXEM8H3LAZkP1F5vM1Dr8kq4Bix5XURvsU-9dX6pXZndP6Xhu2gdSlP0eKYRuI=
    ஒரு அரிசோனன் wrote on 10 November, 2014, 4:21
    // பார்பன சமூகத்தோரிடமும் அவர் எத்தனை நாகரீகமாக நடநது கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்ற.அவர் கடைபிடித்த அரசியல் பண்பு இன்று எவரிடமும் கிடைக்காதவை.அவருடைய தலையாய குறிக்கோள் உறங்கிக்கிடக்கும் ஒரு இனத்தை உசுப்பிவிடுவதுதான்.//
    உசுப்பிவிட்டதன் விளைவைத்தான் இன்றுவரை பார்த்துக்கொண்டிருக்கிறோமே, உயர்திரு வில்லவன் கோதை அவர்களே!  இன்றுமா பெரியாரின் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது?  வரிக்குவரி ஒரு சமூகத்தைத் தாக்கித்தானே கட்டுரைகள் எழுதப் படுகின்றன!  வல்லமையே எங்களுக்குப் பொறுப்பல்ல!”  என்னும் அளவுக்குத்தானே எழுதப்படுகின்றன! 
    காழ்ப்புணர்ச்சியைப் பெரியாரின் சீடர்கள் என்று விடுகிறார்களோ, அன்றுதான் பெரியாரின் சமூக நீதி ஒற்றுமை சிறக்கும்.  அதுவரை, இப்படிப்பட்ட எதிர்மொழிகள்தான் பதிவு செய்யப்படும்.  அவரது சீர்திருத்தங்கள் மறந்துபோகும்.
    சீடர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?
    o   https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgTxRKa-WDogxfBNVZhaYWf38Vcz9LMAVbPrFdYsR4zOxlKlDlCTtZ7G5vkesSZaDOY5h-eWJrdKomtZ_5RMgAPA8VfGABg1DczcDXANgWGy3zFNmDqqZ18NfIF3ZCNMbDq_5KxBbe7bowuHpDWzmUtJMqDSfQHZN0YdzasZMYA0P2zz7gRY_lrl_Fgmgwm0vY=
    வ.கொ.விஜயராகவன் wrote on 10 November, 2014, 4:23
    திரு வில்லவன்கோதை
    நீங்கள் கண்ணியமானவர், ஆனால் ஒரு ஆளுமையைப் பற்றி நாம் வேறுபடுகிறோம். அதனால் ஈவெராவைப் பற்றி நாம் மாற்றுகருத்துக்கு உடன்படுவோம்.
    (agree to disagree) நம் தீவிர அபிப்பிராயங்கள் வாதத்தால் மாறுவதல்ல. விஜயராகவன்
    o   பாண்டியன்.ஜீ
    வில்லவன்கோதை wrote on 10 November, 2014, 16:36
    அன்பார்ந்த அரிசோன்னுக்கு
    வல்லமைக்கட்டுரையின் உள்ளடக்கத்திற்காகவோ உரைநடைக்காக வாதிடிவில்லை. உங்களைப்போல பின்னூட்டங்களை தொடர்ந்து மட்டுமே பேசுகிறேன். 
    நண்பர் விஜயராகவன் இறுதியாகச்சொன்னதைத்தான் நானும் குறிப்பிட்டேன் .வணக்கம்.
    o   பொன் ராம்
    Lakshmi wrote on 11 November, 2014, 15:53
    பெரியார் அவரது வாழ்க்கையில் முதலில் பெண்களை மதித்து வாழவில்லை.பின்னர்தான் ஒவ்வொன்றாகத் தெளிந்து  பெண் குறித்த முன்னேற்ற கருத்துகளைக் கொணர்ந்தார்.எப்பேர்ப்பட்ட மாமலையையும் வீழ்த்தும் எறும்பினம்.அத்தகையது பெண்ணினம் என ஆண்டாண்டு காலமாக ஆண்களால் இழிவுபடுத்தப்பட்டுவருகிறது. காரணம் பெண் வளர்ச்சி பிடிக்காதிருத்தல்,சம உரிமை அளிக்காதிருத்தல். இதைச் சொல்வதற்கு கட்சி தேவையில்லை. படித்தறிந்த அனைவருக்குமே இது புரியும். ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒவ்வொரு கொள்கைகளை வைத்திருந்தனர். அதில் எது பிடிக்கிறதோ அதை எடுத்து வேண்டாததைத் தள்ள வேண்டும். அந்தக் காலத்தில் பிராமணர் உயர்வு இருந்திருக்கலாம். இன்று இருக்கிறதா? எல்லாமே மாறிப் போய் இருக்கும் காலத்தில் சாதி ஏன் வர வேண்டும்? ஆணும், பெண்ணும் சரி சமம். மனிதனாய் பிறந்த எவரும் இந்த உலகத்தில் எதையும் கொண்டு போகப் போவது கிடையாது.ஒரு நில அதிர்வு வந்தால் என் சாதி,என் ஊர்,என் நாடு எனப் பேசுவோமா? மண்ணுக்குள் போகிறவனைக் கையைப் பிடித்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாட்டோமா? அதைப்போல மனிதன் எப்போதும் வாழப்பழக வேண்டும். அவர்கள் காலத்தில் அதெல்லாம் இருந்தது.பெரியார் திருமணம் செய்து கொண்டார்.(அவர் விருப்பம்) பொதுவில் அதை நாம் இப்போது அதைப்பேசினால் என்ன பதில் வரும் என்று எல்லோருக்குமே தெரியும். பழையதைக் களைந்து புதிய நெல் விதைத்து தீய எண்ணமில்லாத சமுதாயம் உருவானால் சரி. இல்லையா
    o   https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgoxtBtqKV_inhCYBknG_9J_3wAv6rhtqfgMpzxZAfnLxCxYWxdEtZxfUnBdZp2h15fUYV-E4KRtrS_9cySQ4JpLq8rl8Sv8rRwwN7OPY-2lN6DKRps73J6ddUbtdzzlAWv_wXEM8H3LAZkP1F5vM1Dr8kq4Bix5XURvsU-9dX6pXZndP6Xhu2gdSlP0eKYRuI=

    ஒரு அரிசோனன் wrote on 12 November, 2014, 7:31
    உயர்திரு வில்லவன்கோதை அவர்களே,
    தங்களது பின்னூட்டங்களில் தங்கள் கண்ணியம் தெரிகிறது.  எனவே உயர்திரு விஜயராகவன் அவர்கள் பதிந்ததையே நானும் மறுபதிவு செய்கிறேன்.
    //நீங்கள் கண்ணியமானவர், ஆனால் ஒரு ஆளுமையைப் பற்றி நாம் வேறுபடுகிறோம். அதனால் ஈவெராவைப் பற்றி நாம் மாற்றுக்கருத்துக்கு உடன்படுவோம்.
    (agree to disagree) நம் தீவிர அபிப்பிராயங்கள் வாதத்தால் மாறுவதல்ல.//
    நாம் தமிழால் ஒன்றாக இணைகிறோம்.  அதைவைத்து நமது ஒத்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம்.
    வணக்கம்.
    ஒரு அரிசோனன்
    o   பாண்டியன்.ஜீ
    வில்லவன் கோதை wrote on 12 November, 2014, 18:44
    அன்பார்ந்த லட்சுமி அம்மாவுக்கு
    இங்கே பேசப்பட்ட பெரியார்  மணம்.
    பெரியாரின் வயது முதிர்ந்த காலத்தில் வேலூரைச்சேர்ந்த தொண்டரின் பெண் தந்தை பெரியாருக்கு தானாக முன் வந்து பணிசெய்தார். அவர்தான் மணியம்மை
    அவர் தோற்றிவித்த  கழகம் அவரே எதிர்பாராமல் அபரிதமான வளர்ச்சி பெற்று சொத்துக்களும் அதிகமாயிற்று.காசு விஷயத்தில் கறாறான பெரியார் கழகத்தின் பிற்காலம் பற்றி குழப்பமடைந்தார். அண்ணாவின் பிரிவின்மூலம் அவர் எண்ணியிருந்த வாரிசு சம்பத் இல்லையென்றாயிற்று.
    அவரதுஅரசியல் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் கொண்டவரும் நெருக்கமான நண்பருமான மூதறிஞர் ராஜாஜின் ஆலோசனைப்படி மணியம்மையை அவர் மணக்க நேரிட்டது.
    இது கழகத்தின் சொத்துகளுக்கு பாதுகாப்புக்கான ஒரு ஏற்பாடே தவிற வேறொன்றுமல்ல என்று அன்றே சொன்னவர் பெரியார்.
    அண்ணா திராவிடக்கழகத்தை விட்டு பிரிந்ததற்கு தலையாய காரணம் இந்த திருமணம் அல்ல. ஆனால் அப்படித்தான் சொல்லப்பட்டது.
    தமிழகத்தைப்பொருத்தமட்டில் பெண்ணடிமைக்காக குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் தந்தை பெரியார்
     அந்தக் காலத்தில் பிராமணர் உயர்வு இருந்திருக்கலாம். இன்று இருக்கிறதா? எல்லாமே மாறிப் போய் இருக்கும் காலத்தில் . .
    இருக்கலாம் அல்ல இருந்தது.
    என் கடந்த காலங்களில் இவற்றையெல்லாம் கண்கூடாக கண்டவன்.நீங்கள் குறிப்பிட்ட இந்த மாற்றங்கள்  நிகழ்ந்துதான் இருக்கிறது  இந்த மாற்றங்களுக்கு தமிழ் மண்ணில் பெரியார்தான் காரணமென்கிறோம்.
    இந்த மண்ணில்  சாதியும் மதமும் ஆன்மீகத்தோடு ஒன்றில் ஒன்று பின்னிக்கிடக்கிறதென்றார் பெரியார். சாதி ஒழிய இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்
    வில்லவன் கோதை
    o   நாகேஸ்வரி அண்ணாமலை

    நாகேஸ்வரி அண்ணாமலை wrote on 13 November, 2014, 5:19
    நாட்டில் இப்போது ஜாதி வேறுபாடு பார்ப்பதில்லை என்பவர்கள் இன்றைய இந்து இதழில் வெளிவந்துள்ள சர்வேயைப் பார்க்கவும்.
    Just 5% of Indian marriages are inter-caste: survey
    AP Inter-caste marriages were rarest in Madhya Pradesh (under 1 per cent) and most common in Gujarat and Bihar (over 11 per cent).
    TOPICS
    social issue
    Just five per cent of Indians said they had married a person from a different caste, says the first direct estimate of inter-caste marriages in India.
    The India Human Development Survey (IHDS), conducted by the National Council for Applied Economic Research (NCAER) and the University of Maryland, also reported that 30 per cent of rural and 20 per cent of urban households said they practised untouchability. The IHDS is the largest non-government, pan-Indian household survey. It covers over 42,000 households, representative by class and social group. Its findings, yet to be made public, were shared exclusively with The Hindu. When married women aged between 15 and 49 were asked if theirs was an inter-caste marriage, just 5.4 per cent said yes, the proportion being marginally higher for urban over rural India.
    There was no change in this proportion from the previous round of the IHDS (2004-05). Inter-caste marriages were rarest in Madhya Pradesh (under 1 per cent) and most common in Gujarat and Bihar (over 11 per cent).
    Survey finds practice of untouchability
    The India Human Development Survey said what female respondents interpreted as a “different caste” is likely to have been subjective, but ultimately closer to the lived reality of an inter-caste marriage.
    “Questions on caste are some of the most complex questions Indian surveys can ask. The same person will say ‘I am Baniya’ today and say ‘I am Modh Banik’ tomorrow; both would be correct,” Sonalde Desai, a demographer who is Senior Fellow at NCAER and Professor of Sociology at the University of Maryland, who led the IHDS-II, told The Hindu.
    “So the IHDS took a simple approach and asked women whether their natal family belongs to the same caste as their husband’s family, allowing us to bypass the complex issue of defining what caste means and get subjective percept-ions from our respondents,” Dr. Desai said.
    The NCAER survey also asked respondents if they practised untouchability, following it up with a question on whether the respondent would allow a lower caste person to enter their kitchen or use their utensils.
    A third of rural respondents and a fifth of urban respondents admitted to practising untouchability. The practice was most common among Brahmins (62 per cent in rural India, 39 per cent in urban), followed by Other Backward Classes (OBCs) and then non-Brahmin forward castes.
    The only other estimate on the extent of inter-caste marriage came from an indirect method. Comparing the answers that the husbands and wives of the same household gave to the National Family Health Survey, researchers Kumudini Das, K.C. Das, T.K. Roy and P.K. Tripathy found that 11 per cent of couples in the 2005-06 NFHS stated different caste groups.
    “This was an indirect way of estimating the extent of inter-caste marriages. We cannot say if it was accurate, but it was a way to approach the truth,” Dr. K.C. Das, Professor in the Department of Migration and Urban Studies at the Mumbai-based International Institute of Population Sciences (IIPS), explained to The Hindu.
    முழுச் செய்திக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !