வெள்ளி, பிப்ரவரி 02, 2018


மென்மைக்கு ஒரு விருது 1
வில்லவன் கோதை 
மதிப்பிற்குறிய மூத்த பத்திரிக்கையாளர் திரு மாலன் நாராயணனுக்கு இந்த ஆண்டுக்கான பாரதீய பாஷா விருது கிடைத்திருக்கிறது.
கொல்கத்தாவை மையமாக கொண்டு இயங்கும் இந்திய மொழிகள் சார்ந்த ஒரு தன்னார்வு நிறுவனம் இந்த விருதை  கொடுத்து சிறப்பித்திருக்கிறது..
ஜெயகாந்தன்
அசோக மித்திரன்
பிரபஞ்சன்
சிவசங்கரி
இந்திரா பார்த்த சாரதி
வைரமுத்து
என்ற இலக்கிய ஜாம்பவான்கள் வரிசையில் திரு மாலனும் இணைகிறார்.
ஏறதாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் இலக்கியம் பத்திரிக்கை ஊடகம்  சார்ந்த பல்வேறு துறைகளில் தொய்வின்றி இயங்கிவருபவர் 
திரு மாலன்.
இருபதுக்கு மேற்பட்ட மெல்லிய உணர்வுகள் சார்ந்த நூல்களை எழுதியவர். தொலைகாட்சி ஊடகங்களிலும் அவர் தொடர்ந்து இயங்குபவர். சாகித்ய அகாதமி போன்ற மொழிகள் சார்ந்த பல்வேறு அமைப்புகளிலும் அவருடைய ஆளுமை இடம்பெற்றிருந்தது.. அவருடைய  அரசியல் கருத்துகளில் மாறுபட்ட எண்ணங்களை  கொண்டிருந்தாலும் நெடுங்காலமாக திரு மாலனை நேசிப்பவன் நான் .நிதானமான வன்மமற்ற அவருடைய சொற்களே இதற்கு தலையாய காரணமாக இருக்கக் கூடுமென்று கருதுகிறேன்.அவர் நெடுநாட்கள் நோயற்று வாழ நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !