பாண்டியன்ஜி
அக்ரமங்களும் அநீதிகளும் பெருமளவில் தலையெடுக்கத் துவங்கும்போது நின்று கொல்லும் தெய்வமாக பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார் என்று ஆன்மீக பேச்சாளர்கள் அடிக்கடி பேசக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு நிகழ்கிறதோ இல்லியோ இந்த தேசத்தில் நிகழுகின்ற ஒவ்வொரு அக்ரமத்தையும் அழித்தொழிக்க இந்த நாட்டில் மிச்சமிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான்.
பெரும்பாலும் தவறுகளே செய்யக்கூடிய மனிதர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்பில் பணப் பேராசையும் தனிமனித ஒழுக்கமின்மையும் தாராளமாக இடம் பெருவது இயல்பான ஒன்றுதான். பொருளாதாரத்தில் தேசம் வளற்சியுற,வளற்சியுற மனித சமுதாயத்தின் பேராசைகளும் பெருமளவு பெருகி வருவது மறுக்கமுடியாத உண்மை.நாகரீகத்தையும் நல்வாழ்வுத் தத்துவங்களையும் போதிக்க வேண்டிய கல்வி திசைமாறி பணம் குவிக்கும் பாதைகளை திறந்துவிட்டதுதான் மிச்சம்.உலகெங்கும் பரவிக்கிடக்கும் கலாச்சார சீரழிவு இன்று நீதி மன்ற வளாகத்தையும் விட்டு வைக்க வில்லை என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் கண்ணியம் மிக்கதாய் கருதப்படும் கல்வித்துறையும் மருத்துவத்துறையும் கூட எப்போதோ வணிகச் சேற்றில் சிக்கித்திணற துவங்கிவிட்டன என்பதை இந்த நாடு அறியும். நாடு விடுதலையுற்றபோது இந்த மண்ணின் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் போற்றிப்புகழத்தக்கனவாகவே இருந்திருக்கின்றன. தாமதிக்கப்பெற்ற தீர்ப்பேயாகிலும் ஒரு குற்றமற்றவன் கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கையாகவே இருந்திருக்கின்றன. வழக்குகள் தேங்குவதற்கும் வாய்தாக்கள் பெருகுவதற்கும் இதுவேகூட தலையாய காரணமாய் இருந்திருக்கக்கூடும்.இருந்தபோதிலும் இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிய துணிவுமிக்க தீர்ப்புக்கள் சரித்திரத்தில் என்றும் நினைவு கூரத்தக்கவையே.பொருளாதாரத்தில் பெரும் உச்சத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளை திரும்பிப் பார்க்க தூண்டுபவையாகவே இருந்திருக்கின்றன.இந்த மண்ணின் மக்களுக்கு இந்த தேசத்த்தில் வாழ்வதற்கு தேவையான மறியாதையையும் நம்பிக்கையையும் அள்ளிக்கொடுத்தவை.இருந்த போதிலும் --
சமீப காலமாக தொடர்ந்து வரும் நீதித்துறை சார்ந்த தகவல்கள் மக்கள் மனதில் விதைக்கப் பெற்றிருந்த நம்பிக்கையை பெரிதும் அசைத்துப் பார்த்திருப்பதாகவே தோன்றுகிறது. தராசுக்கேற்பட்ட தடுமாற்றத்தை உணரமுடிகிறது.
1992 - டிசம்பர் - 6 ஆம் நாள் !
கடந்த கால வரலாற்றுக் காலடியாகவும் , சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமாகவும் கருதப்பட்ட பாபர்
நினைவிடம் முழுமையாக தகற்கப்பட்டது. இந்த மண்ணின் புராதன சின்னங்களை விட்டுவைப்பதே வருங்கால
சமுதாயத்தின் வளற்சிக்கு வித்தாகும் என்ற எண்ணம் அடியோடு அழிக்கப்பட்டது. இந்த தேசத்து சக சகோதரர்களின் புனிதப்பகுதி இனி இல்லையென்றாயிற்று. இந்த மாபெரும் கொடூரத்தை அரங்கேற்றிய காவிகளின் செயலை கைகட்டிப்பார்த்த காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு குற்றவளி என்பதை இந்த நாடு மறப்பதற்கில்லை. இதுபோன்ற வக்கிரமான எண்ணங்கள் தொடர்ந்து அரங்கேருமானால் இந்த நாட்டில் மிஞ்சப்போவது எதுவுமில்லை என்பதை உணரவேண்டும்.
ஏறதாழ 8 ஆண்டுகளாக இந்த வழக்கு எந்தமுடிவும் எட்டப்படாமலேயே இருந்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களுக்கும் இந்த பிரச்சனையை இறையாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. கடந்த மாதங்களில் ஒரு நாள் --
ஒருவழியாக உச்சநீதிமன்றம் ஒரு சமரசத்தீர்ப்பை வழங்கி காவிகளை திருப்திகொள்ளச் செய்தது.அனைத்து
பிரிவினரையும் சமரசம் செய்யும் விதமாக சமமாக பங்கிடும் முடிவை அறிவித்து ஏறதாழ இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இந்த தேசத்து மக்களோ இனியும் புலியின் வாலைப் பிடித்து ஓடத்தயாராக இல்லை! இரைச்சல் ஓய்ந்தால் சரி என்ற நிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டிருந்தார்கள்.அதே சமயம் -
இது நாள் வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குகிறோம் என்று சிரம் தாழ்த்தியவர் எல்லாம் இன்று உச்ச நீதிமன்றத்தின் எழுத்துக்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கத் துணிந்துவிட்டார்கள். அதற்கேற்றார்போல் நாடெங்கும் நிரம்பிக் கிடக்கும் ஒழுங்கீனமும் ஊழல்சீரழிவும் கண்ணியம் மிக்க நீதித்துறையையும் வாரி அணைக்கத் தொடங்கிவிட்டது.
தேவைக்கதிகமான சொத்துக்களை முறையின்றி சேர்த்துக் குவித்த நீதியரசர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆளும் அரசு ஏழை எளிய மக்களுக்கு வாக்குச்சீட்டுகளுக்காக வழங்கநேர்ந்த தரிசு நிலங்களனைதையும் வளைத்து வேலிகட்டிய ஒர்
நீதிபதியின் கதை பத்திரிக்கைகளில் தொடர்கதையாக பிரசுரிக்கப்பெற்று வாசகர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தியது. என்ன காரணத்தினாலோ இடையிலே நிறுத்தப்பட்ட அந்த தொடர் பின்னர் மக்கள் மனதிலிருந்து மறைந்து போயிற்று.இன்றைய வழக்கறிஞர்களோ சட்ட புத்தகங்களையும் வழக்குமன்றங்களையும் தினந்தினம் புரக்கணித்து வீதிக்கு வரத்
துவங்கிவிட்டனர். கனம் நீதிபதி அவர்களே என்று அழைக்கப்பட்ட நீதிமன்றங்களில் கண்ணியம் குறைந்த சொற்கள் வெடித்து சிதறுகின்றன. கருப்பு கவுன்களை மட்டும் இறுகபற்றிக்கொண்டு நீதிதுறையின் அத்தனை
மாண்புகளையும் வீதியிலே சிதறடிக்கப்பெற்றதை தொலைக்காட்சிகளில் கண்டவர்கள் நாம். கல்வியின் மீது முழு நம்பிக்கையற்றவனே ஆயுதங்களை அள்ளுகிறான் என்பது முழு உண்மையாயிற்று.இது மட்டுமின்றி
நம்பிக்கைக்குரிய நீதியரசர்களுக்கிடையே நிகழுகின்ற வெளிப்படையான உரையடல்கள் சாமான்ய மக்களைக்கூட வியக்கவைக்கின்றன,
சென்ற மாதத்தில் ஒரு நாள் -
ஒரு வழக்கறிஞர் பதவியிலிருக்கும் ஒர் மத்திய மந்திரியின் பெயரைச்சொல்லி என்னை மிரட்டுகிறார்.. என்கிறார் ஒரு நீதிபதி. அந்த மந்திரி
யாரென்று அந்த நீதிபதி வெளிப்படுத்தவில்லை.
அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிவிட்டேன்....பதிலளிக்கிறார் மாநில தலைமை நீதிபதி. அவரும்அந்த மந்திரி யாரென்று வெளிப்படுத்த வில்லை.
வந்து சேர்ந்த அறிக்கையில் மந்திரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை...முற்றுப்புள்ளி இடுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
அத்தனை பேரும் மெளனம் காக்கிறார்கள். மக்களின் சிந்திக்கும் ஆற்றலை முடுக்கி விடுகிறார்கள்.
இரண்டொரு மாதம் கழிகிறது.
ஊழல் புகாரில் ஒரு மத்திய மந்திரி சிக்குகிறார்.
மேற்சொன்ன மூவரும் சிலிர்த்தெழுகிறார்கள்.
நான் அனுப்பிய அறிக்கையில் 2 வது வரியில் மந்திரியின் பெயரை சிகப்புமையால் கோடிட்டிருந்தேன்..... விழித்துக்கொண்ட மாநில தலைமை நீதிபதி உரக்க கத்துகிறார்.
உங்கள் சத்தத்துக்கு நன்றி... நவில்கிறார் துவக்க ஆட்டக்காரர்.
அப்போதும் சொன்னேன்.இப்போதும் அதையே சொல்கிறேன் சிகப்பு மையே இல்லை. ... மீண்டும் முற்றுப்புள்ளி வைக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
இப்போது என்ன ஆயிற்று .
நீதி அத்தனையும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டது.
--------------------------------------------
இடறுகள் ஏற்படும் போதெல்லாம் ஜாதிய கேடயத்தை கலைஞர் எடுக்கத்தவறியதில்லை..
கட்டுரையாளர் ஞாநி ஓ ..வென்று அடிக்கடி எழுதி படித்திருக்கிறேன்.
இப்போது...
தாழ்ந்த ஜாதிக்காரனைக் காக்க தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி உண்மைகளை மூடி மறைக்கிறார். அதே ஓ..வென்ற இரச்சல். முள்ளை முள்ளால் முறிக்கும் ஞாநியேதான் !
இடுகை 0031
உங்கள் உணர்வுகளை மறுமொழி ( COMMENT ) மூலம் வெளிப்படுத்துங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !