சனி, ஜூன் 04, 2011

திருவிளையாடல் ஆரம்பம்!

கலைஞர் எழுப்பிய தலைமைச் செயலகம் 

பாண்டியன்ஜி

மக்கள் விரும்பி ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தேர்தல் முடிவுகள்   தெரியத் தொடங்கிய அடுத்த சில நொடிகளிலேயே   அரங்கேரத் துவங்கிவிட்டன.
வழக்கமாக அரசு அலுவலகங்களில்  புதிதாக பொருப்பேற்க வரும் அரசுஅதிகாரி குறைந்தபட்சம் தம் இருக்கைகளையாவது மாற்றியமைத்து
பழைய அதிகாரியின் அடையாளங்களை அகற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.பெரும்பாலும் இருக்கைகள்தாம் இடம் மாறுமே தவிற செயல்பாடுகள் எதுவும் மாறியதாய் எனக்கு நினைவில்லை.இதற்கெல்லாம் அன்நாளில் பெரிதாக செலவுகள் எதுவும் செய்ததாக தெரியவில்லை.தனிநபர் ஒழுக்கமின்மையும் மிகுந்த துணிவும் கொண்ட ஒருசில அதிகாரிகள் இந்த வகையில் ஏற்படுத்திய விரயங்களை காலப்போக்கில் எவரும் கேட்பதற்கு இயலாமல் போனது.சட்டங்களிலும் விதிகளிலும் ஆங்காங்கே காணப்பட்ட பொந்துகளே இது போன்ற துணிவுகளுக்கு துணையாய் நின்றது.
சாதாரணமாக ஒரு அரசு அதிகாரியின் மனநிலையே அவ்வாறு இருக்கும் போது பத்தாண்டுக்கு பிறகு பெரும்பாடுபட்டு பதவிக்கு வரும் கட்சியின் தலைவி அதே இடத்தில் அதே இருக்கையில் அமர்ந்து மீண்டும் ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுத்திட முடியுமா.
மக்களுக்கேற்பட்ட இழப்புகளைச்சொல்லியே பதவிக்கு வந்தவர்கள்அடுத்த சில நாட்களிலேயே அதற்கிணையான விரயங்களை ஏற்படுத்தி மாற்றங்கள் மக்களுக்கு மட்டும்தான் என்று மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.தாங்கள் எந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை சில நாட்களிலேயே அறிவித்திருக்கிறார்கள்.ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப் பொறுப்புக்கு இடம் மாறும்போதும் சில மெல்லிய மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.ஆட்சியை விட்டு வெளியேறுகிற எந்தகட்சியும் அரசு கஜானவை நிரப்பிவைத்ததாக வரலாறு இல்லை.அந்த வகையில் இப்போது புதிக பொறுப்பேற்ற அரசு தலைமைச்செயலகம் முதல் இந்த மாநிலத்தின் கடைநிலை ஊழியர் வரை மாற்றியமைக்கத் துவங்கிவிட்டது.நூற்றுக்கு மேற்பட்ட அய் எ எஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பந்தாடப்பட்டிருக்கின்றனர்.   இன்னும் கடைகோடியில் உள்ள மின்சார இலாகாவின் ஏரியா வயர்மேனில் இருந்து ஹெல்ப்பர் வரைகூட இட மாறுதலுக்கான முதல்வரின் ஆணைகளை எப்போது வேண்டுமானாலும் எதிர் நோக்கலாம்.
பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டிய ஜனநாயகசூழல்களில் கடைநிலை ஊழியர் மாற்றங்களுக்கு கூட முதல்வரின் ஆணை தேவைப்படுவது துரதிஷ்டம்தான்.
உபயொகித்து உதருதல்!    
பொருந்தாத உடையையும்கடிக்கின்றகாலணியையும் பழுது பார்த்து பயன்படுத்தியது பழையகாலம்.இப்போதெல்லாம் தூக்கி வீசி விட்டு வேறொன்றுக்கு மாறுவதுதான் இன்றைய வாழ்க்கை.இதில் இந்த அரசு மட்டும் விதி விலக்கா என்ன.
ஆனால் ஏற்படுகிற இழப்பு தனிமனிதர் எவருக்குமல்ல , மொத்த சமூகத்துக்குமே என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.முக்கியமாக தலைமைச்செயலக மாற்றத்தையும் சமச்சீர் கல்விக்கேற்பட்ட சாமாதியையும்தான் குறிப்பிடுகிறேன்.
புதிய தலைமைச்செயலகம் இந்த மண்ணுக்கு அர்ப்பணிக்கப் பெற்றபோது விழாவில் கலந்து கொண்ட பிரதம மந்திரி உள்ளிட்ட பல்வேறு மாநில த்தலைவர்கள் தலைமைச்செயலக வளாகத்தை வியந்து பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.வெவ்வேறு மொழிகளில் வெளியான பல்வேறு பத்திரிக்கைகள் புதிய தலைமைச்செயலகத்தின் வெவ்வேறு கோணங்களை அச்சிட்டு அதன் கட்டுமான திறனை புகழ்ந்தது நினைவுக்கு வருகிறது.
உத்திரமேரூர் பகுதிகளில் காணப்பட்ட கலாச்சார அடையாளங்களாக கருதப்படும் மாக்கோலங்களின் வடிவத்திலும் அன்னிய மண்ணின் அதி நுட்பத்திறனிலும் இணைந்து உருவாக்கப்பட்டது புதிய தலைமைச்செயலகம் என்று ஆங்கில இதழ்களில் வரையப்பட்ட கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். முன்னும் பின்னும் அணி அணியாக வந்து வியந்து நின்ற மக்களையும் கண்டிருக்கிறேன்.
அத்தனையும் இன்று மக்கள் தேடிக்கொண்ட மாற்றத்தால்
மறக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர்பெருமக்களால் கோரப்பட்டு நெடிய பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு சென்ற வருடம் துவக்கப்பட்ட சமச்சீர் கல்வி இப்போது இந்தபுதிய அரசின் தெளிவற்ற போக்கினால் திடமற்ற நிலையில் நிற்க நேர்ந்திருக்கிறது.இந்த திட்டம் துவக்கப்பட்ட
நேரத்தில் புத்தகங்களின் நேர்த்தியையும் திட்டத்தின் நோக்கத்தையும் வண்ணமயமாக எழுதிய ஏடுகள் கூட இப்போது வணிககூட்டங்களுக்கு ஆதரவாக பேசுவதை பார்க்கிறேன்.ஜாதிய சங்கங்களும் வணிகக்கூட்டங்களும் இணைந்து எழுப்பிய கோரிக்களை உச்ச நீதிமன்றமே
நிராகரித்தபின்னும் இந்த அரசு சொத்தைக்காரணங்களை பேசி கிடப்பிலே போட்டிருக்கிறது.
முன்னதாக செய்த செலவினங்களை விரையமாக்கி மீண்டும் செலவுகளை செய்ய முடிவு செய்திருக்கிறது.மொத்தத்தில் ஒரு சமதர்ம சமுதாயத்துக்கேற்ற திட்டத்தை சமாதி நிலைக்கே கொண்டு
சென்றிருக்கிறது இந்த அரசு.
மூன்று மணி நேரமே எழுதக்கூடிய பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களைக்கூட பிழையின்றி நம்மால் தயாரிக்க
முடிந்ததில்லை.இருந்தபோதும் திருத்தப்பட்டு சரி செய்யப்படுகிறது.எப்போதுமே அரசின் எந்தவொரு ஆணையும் அடுத்தடுத்து வெளியிடப்படுகிற திருத்தங்கள் எதுவுமின்றி
கலைஞர் எழுப்பிய தலைமைச் செயலகம் 
முழுமையடைந்ததில்லை.சமச்சீர்கல்விப்புத்தகங்களில் ஏற்பட்டிருக்கிற மனிதக்குறைபாடுகளையும்அச்சாக்கும்போது ஏற்பட்டுவிட்ட பிழைகளையும் கூட அடுத்தடுத்த சுற்றறிக்கைகள்மூலம் சரி செய்திட முடியும்.அதைவிடுத்து அறவே அகற்றுவது ஜாதிய வர்கத்தினருக்கு ஏற்படுத்தும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.கட்சிக்காரர்கள் சுரண்டிக் கொழுக்க துணையாயிருக்கும்.
ஊழல் ஒருபக்கம் இந்த நாட்டை உலுக்குகிறது.விரயம் மறுபக்கம்
வேட்டையாடுகிறது.
வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் தாவி ஏறியது !

இடுகை 0061